புராணங்களின் படி இம்முகம் தொங்கிய தாடி உடையதாய் வெளிப்பட்ட பற்களுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய் கரிய நிறமாகி வயதான முகம் போல் வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் இம்முகம் அக்னியை குறிக்கின்றது. ஐந்தொழிலிலே அழித்தல் தொழிலை (சம்ஹார காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'சி'. ஐயன் அகோர ருத்ர ரூபம். அம்மை இச்சா சக்தி.
அகோரேப்யோத கோரேப்யோ கோரகோர தரேப்ய: ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய என்னும் தக்ஷ’ண வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்தோம்.
மற்றும் திருக்கயிலாயம்






இது வரை அலி ரோட்டிலிருந்து கண்ட தரிசனம் இனி வருவது யமதுவாரத்திலிருந்து கண்ட தரிசனம்




žரிய சிம்மாதனத்தில் அமர்ந்து உலகை இரக்ஷ’க்கும்
ஜகன் நாயகி நாயகனின் தரிசனம் நந்தியுடன்

நந்தி தேவர் தரிசனம்
எங்கள் குழு தக்லகோட்டில் தங்கியிருந்த போது நாங்கள் சந்தித்த ஒரு மும்பை புகைப்படக்காரர் 18 முறை கைலாய தரிசனம் செய்தவர், ஆலோசனை கூறியபடி டார்ச்சென் முகாமிலிருந்து 18 கி. மீ பயணம் செய்து திருக்கயிலாய தரிசனம் செய்தோம். இது வரை நாம் செய்த தரிசனம் முக மண்டலம் மட்டும் தான் இப்போது நாம் செய்யும் தரிசனம் அடியிலிருந்து முடி வரை. நந்தி மற்றும் கணேசருடன்

No comments:
Post a Comment