மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Monday, January 2, 2012

கண்டேன் அவர் திருப்பாதம் - 4 திருக்கயிலாய யாத்திரை

திருக்கயிலாய யாத்திரை செல்ல செய்ய வேண்டியவை



நம் கோனும் பிராட்டியும் இந்த புவனம் முழுவதற்கும் அரசன் அரசியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் அழகுதான் என்னே!






மை கலந்த கண் பங்கன், மாதியலும் பாதியன், செங்கண் கருங்குழலி நாதன், பேரமை தோளி காதலன், மானேர் நோக்கி மணாளன், பஞ்சேரடியாள் பங்கன், குவளைக் கண் கூறன், கொம்பரார் மருங்குல் மங்கை கூற வெண்றன், செவ்வாய் சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளன், கயல் மாண்ட கண் பங்கன், பந்தணை விரலி பங்கன், அம்மை ஜகத்ஜனனி பார்வதியுடன் உறையும் திருக்கயிலை யாத்திரை( இந்தியா வழியாக ) செல்ல நாம் செய்ய வேண்டியவற்றை இப்பதிவில் காண்போம்.

முதலில் யாத்திரைக்கான விளம்பரம் வரும் வரை காத்திருந்து வந்தவுடன் விண்ணப்பம் இட வேண்டும். விண்ணப்பம் இட்ட பின் அம்மையப்பா உந்தன் இல்லம் வரை நான் வர தாங்கள் உத்தரவு தர வேண்டும் என்று தினமும் வேண்ட வேண்டும். யாத்திரிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யப்படுவதால் தன்னுடைய இல்லத்திற்கு சிவசக்தி அழைத்தால் மட்டுமே( தேர்வு செய்யப்பட்டால்) மட்டுமே நாம் செல்ல முடியும்.அவர்கள் தரிசனம் பெற முடியும்.

ஜனவரி மாத கடைசி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் எல்லா நாளிதழ்களிலும் திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது ரம்பியவர்களும் 70 வயதை தாண்டாத இந்திய குடி மக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 15 ம் தேதி இறுதி நாள். விண்ணப்பப் படிவங்களை KMVN.org அல்லது kmyatra.org என்ற இணைய தலங்களிலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். இவ்விரண்டு இணைய தலங்களிலும் இந்திய அரசின் கைலாஷ்-மானசரோவர் பற்றிய முழு விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நலம் இருப்பவராய் இருத்தல் மிகவும் அவசியம். திருக்கயிலாய மலையின் சுற்றுப்பாதை 5000 மீட்டருக்கு மேல் உயரமானதால் அங்கு பிராண வாயு குறைவாக உள்ளது, மேலும் காற்றின் அழுத்தமும் உயரத்தில் செல்ல செல்ல குறைவு எனவே உடல் நலம் நன்றாக இருப்பது முக்கியம். குறிப்பாக, இதய நோய், ஆஸ்த்மா, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறு நீரக கோளாறு, வலிப்பு நோய் உள்ளவர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 16 குழுக்கள் அனுப்பபடுகின்றன. ஒவ்வோரு குழுவிலும் அதிக பட்சம் 40 பேர். இதிலே 44 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் 19 பேர் பெண்கள், 25 பேர் ஆண்கள். 2006 வருடத்திலிருந்து இந்த எண்க்கை அதிக பட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் மருத்துவ பரிசோதனையைப் பொறுத்து குழுவினரின் எண்க்கை மாறுபடும். ஏனென்றால் žனப் பகுதியில் உள்ள தங்குமிடங்களில் 30 பேருக்கு மேல் தங்குவது கடினம் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.

முதல் குழு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் கிளம்புகின்றது. பின் ஒவ்வொரு வாரமும் அடுத்த குழு கிளம்புகின்றது. 16வது குழு செப்டெம்பர் 15 தேதி செல்கின்றது. அடியேனுக்கு 2005ம் வருடத்திய 14ம் குழுவில் செல்லும் பாக்கியம் கிடைத்தது.எங்கள் யாத்திரை ஆகஸ்ட் மாதம் 15 நாள் தொடங்கி செப்டம்பர் மாதம் 12 தேதி வரை நடை பெற்றது. விண்ணப்பித்தவர்களிலிருந்து கண மூலம் யாத்திரை செல்பவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அந்த எம்பெருமான், கயிலாயபதி, உமாபதி, பசுபதி, சிவகாமிபதி, கௌரிபதி, அம்பிகாபதி தன்னுடைய இல்லத்திற்கு யார் யார் வரவேண்டும் என்று தானே முடிவு செய்கிறார். பின்னர் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனே தந்தி மூலம் இந்த செய்தி அறிவிக்கப்படுகின்றது. ஆனால் இப்போதைய உலகம் இன்டெர்னெட் உலகம் எனக்கு செய்தி கிடைத்தை இ-மெயில் மூலமாக.சென்னையிலுள்ள குமான் மண்டல அபிவிருத்தி கார்ப்பரேசன் (KMVN) மூலமாக எம்பெருமானுடய அழைப்பை பற்றிய செய்தி எனக்கு வந்தது. குமான் மண்டல அபிவிருத்திக் கழகம், உத்தராஞ்சல் அரசின் சுற்றுலா றுவனம் யாத்திரிகளின், உணவு, தங்கும் இடம், வாகன வசதி அனைத்துயும் கவனித்துக் கொள்கின்றது. இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ITBP) யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது.

யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி தெரிந்தவுடனே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை நமது உடலை அந்த கடினமான யாத்திரைக்கு தயார் செய்வது. நடை, ஒட்டம், யோகா, பிராணயாமம் ஏதாவது ஒன்றை தினமும் காலையும் மாலையும் செய்து வந்தால் உடலும் பலப்படும், நமது கை கால்களில் உள்ள தசைகள் அந்த கடினமான உயர் மட்ட நடைப்பயணத்திற்கு ஏற்றவாறு பலப்படுவது மிகவும் நல்லது. யாத்திரையும் சுகமாக இருக்கும்


மானசரோவர் கரையிலிருந்து திருக்கயிலாய தரிசனம்





யாத்திரைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்று விரிவாகப் பார்க்கலாமா?

1. கம்பளி ஆடைகள் - உயர் மட்டம் ( high altitude) என்பதால் இரவில் நல்ல குளிராக இருக்கும், மேலும் லிபு கணவாய், டோல்மா கணவாய் ஆகியவற்றை கடக்கும் போது நல்ல பனியும் இருக்கும் எனவே தலைத்தொப்பி, ஸ்வெட்டர்கள், கம்பளி உள் ஆடைகள்(Inners), கம்பளி அல்லது தோல் கையுறைகள் (hand gloves), கம்பளி காலுறைகள் ( woolen socks) ஆகியவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். அவரவர்கள் குளிரைத் தாங்கும் சக்திற்கேற்ப இரண்டோ மூன்றோ எடுத்துச் செல்லவும். மேலும் யாத்திரையின் போது காற்றும் மிக வேகமாக வீசும் என்பதால் wind sheeter ஒன்றும் தேவைப்படும்.

2. கறுப்புக் கண்ணாடி- பனிச்சிகரங்களில் உள்ள பனித் துகள்களில் சூரிய ஒளி பட்டு சிதறும் போது அதில் புற ஊதாக்கதிர்கள் அதிகம் இருக்கும் என்பதால் கண்ணை பாதுகாத்துக் கொள்ள நல்ல UV filter கொண்ட கறுப்பு ற கண் கண்ணாடி தேவை அதுவும் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் கயிருடன் இருந்தால் மிகவும் நல்லது..

3. மலையேறும் காலகள்: (Trekking/hunter/Marching Shoes) - ஏனென்றால் மலையேறும் போது வழுக்காமலிருக்க. வழியில் பல்வேறு நீர் வீழ்ச்சிகளை கடந்து செல்ல வேண்டி இருக்கும் மேலும் பனியில் நடக்கும் போது காலகள் நனையும், ஈர காலகளுடனே நடந்தால் காலில் கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது மேலும் அவை அங்கே எளிதில் ஆறாது , எனவே இரண்டு ஜோடி காலகள் கொண்டு சென்றால் நல்லது. இரண்டு அதிகப்படி laces எடுத்து செல்வதும் நல்லது. Action Shoes ல் நல்ல தரமான Trekking Shoes குறைந்த விலையில் கிடைக்கின்றன. நீர் வீழ்ச்சிகளைக்கடக்கும் போது அந்து கொள்ள எளிதில் உலர்ந்து விடும் canvas வகை காலகளையும் எடுத்து செல்லலாம்.

4. உடைகள்:- நாம் அணியும் ஆடைகள் எளிதில் உலர்ந்து விடுவனவாக இருந்தால் மிகவும் நல்லது. இரண்டு/மூன்று Track suits இருந்தால் போதும் யாத்திரை முழுவதையும் நாம் முடித்து விடலாம், சாமான்களின் எடையும் குறைவாக இருக்கும். பேண்ட்/ சர்ட் என்று அதிகப்படியாக எடுத்து செல்வதால் உபயோகம் இல்லை. மேலும் உயர் மட்டங்களில் காற்று அதிக வேகத்தில் வீசுவதால் துகளை துவைத்தாலும் žக்கிரமாக காய்ந்து விடுகின்றன. கூஞ்சி, தக்லகோட், டார்ச்சென் முதலிய இடங்களில் நாம் தங்கும் சமயம் துகளை துவைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன.

நாம் எடுத்து செல்லும் பொருட்களின் எடைக்கு கட்டுப்பாடு உள்ளது, மொத்தம் 25 கிலோ பொருள்களைத்தான் நாம் மேலே எடுத்து செல்ல முடியும். அதிலும் 5 கிலோ அனைவருக்கும் பொதுவான உணவு, பூஜை சாமான்கள், மருந்துகள் முதலியன என்பதால் நம்முடைய சொந்த பொருள்கள் 20 கிலோ மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. யாத்திரையின் நடைப்பயணத்தின் போது நமது பொருட்கள் கோவேறுக் கழுதைகள் மூலமாக நம்முடன் அனுப்பி வைக்கப்படுகின்றது என்பதால் இந்த கட்டுப்பாடு. குழுவினர் அனைவருடைய சாமான்களும் மொத்தமாக எடை போடப்படுவதால் எங்கள் குழுவில் யாருக்கும் எந்த சிரமும் வரவில்லை. நம்முடைய பொருட்களின் எடை அதிகமாக இருந்தால் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டி வரும். எனவே நமக்கு வேண்டாத பொருள்களை தாருசூலா, நபிடாங், தக்லகோட் முதலிய இடங்களில் வைத்து செல்லவும் வசதி உள்ளது பின் திரும்பி வரும் போது அவற்றை நாம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் .

5. தொப்பி- : சூரியனின் கதிர்களை நமது முகத்தில் விழாதவாறு தடுக்கும் தொப்பி ஒன்று ( Peaked cap or broad brimmed straw hat).

6.தண்ணீர் பாட்டில் அல்லது சுடு தண்ணீர் வைத்துக் கொள்ள பிளாஸ்க் கழுத்தில்/தோளில் மாட்டிக் கொள்ளக்கூடியது - .கைலாய கிரி வலம் வரும் போது சூப், காபி முதலியன போட்டு அருந்தவும், நடைப்பயணத்தின் போது ஏற்படும் தண்ர் தாகத்தை தக்கவும் இது பயன்படும். மேல் மட்டங்களில் உள்ள தண்ரில் தாது உப்புகள் அதிகம் என்பதால் குளோரின் மாத்திரைகளை எடுத்துச் செல்வது நல்லது அவற்றை தண்ரில் கலந்து அருந்த. எங்கள் குழுவினர் அனைவருக்கும் பொதுவாக இவற்றை வாங்கிச் சென்றோம்.

7. டார்ச் லைட்: - பெரியது ஒன்று , இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும் போது பயன்படும். உயர் மலைகளில் பேட்டரி செல்கள் (Battery cell) சீக்கிரம் தீர்ந்துவிடும் என்பதால் அதிகப்படியான பேட்டரிகளை எடுத்துச் செல்லவும், ஒன்றிரண்டு பல்ப் (bulb) கைவசம் இருப்பதும் நல்லது. பேட்டரி செல்களை கம்பளி துயில் சுற்றி அதிகம் குளிர் படாமல் வைத்தாலும் அவை சிறிது நாட்கள் அதிக நாட்கள் உழைக்கும்.


8. மழைக் கோட்: - நாம் யாத்திரை செய்யும் காலம் தென் கிழக்கு பருவக்காற்றுக் காலம் என்பதால் மழை, பனிப் பொழிவு மேலும் நீர் வீழ்ச்சிகள் முதலியவற்றிலிருந்து காத்துக் கொள்ள ஒரு rain coat அவசியம்.

9. இடுப்புப்பை:- இடுப்பில் மாட்டிக்கொள்ளக்கூடிய பை (belt pouch) தண்ணீரில் நனையாதது ( water proof) பணம், பாஸ்போர்ட், சிறிய கேமரா, மருந்துகள், சாக்கலேட்கள் பச்சை கற்பூரக்கட்டி, சூப் பவுடர்கள் முதலிய பொருட்களை வைத்துக் கொள்ள. கழுத்துப்பை: : பாஸ்போர்ட் முதலிய மிகவும் முக்கியமான பொருட்களை வைத்துக் கொள்ள தண்ணீரில் நனையாத கழுத்தில் தொங்கவிடக்கூடிய பை ஒன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


10. பிளாஸ்டிக் பை - : நம்முடைய உடமைகளை மேலே எடுத்து செல்லும் போது மழை, பனியிலிருந்து காப்பாற்ற, பொருட்கள் நனையாமலிருக்க அவற்றை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டி எடுத்து செல்வது அவசியம். கோவேறு கழுதைகள் மூலம் பொருட்கள் எடுத்து செல்லப்படுவத ‘ல் கடினமான பெட்டிகளுக்கு ( suit case ) அனுமதி இல்லை. பைகளிலேயே ( flexible bags) பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். ஒரு பைக்கு இரண்டு பிளாஸ்டிக் பை, ( உரப்பை போன்று கெட்டியானது) மற்றும் அவற்றை நன்றாக கட்டுவதற்குரிய பிளாஸ்டிக் கயிறுகள் அவசியம்.

11. தட்டு, டம்ளர், ஸ்பூன். சீனப்பகுதியில் கைலாய மற்றும் மானசரோவர் கிரி வலத்தின் போது பயன் படும்.

12. முகக்கிரீம்கள் :- குளிரிலிருந்து முகத்தை கைகளை காப்பாற்றிக் கொள்ள cold cream/ vaselin, புற ஊதாக் கதிர்களை தடுக்கும் sun screen lotion எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் வெளியே நடைப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் இரண்டையும் ஒன்றாக குழைத்து முகத்திலும் கைகளிலும் பூசிக் கொண்டு சென்றோம்.

13. மெழுகு வர்த்திகள்: - žனப்பகுதியில் கிரி வலத்தின் போது முகாம்களில் மின்சாரம் கிடையாது, இந்தியப் பகுதியிலும், ஜெனெரேட்டர்கள் குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே ஓடுகின்றன எனவே மெழுகுவர்த்தி எடுத்துச் செல்வது அவசியம். தீப்பெட்டிகளை எடுத்து சென்றால் காற்றின் வேகத்தில் அவை அனைந்து விடலாம் எனவே லைட்டர்கள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

14. ஊன்று கோல் (walking stick): - மிகவும் அவசியம் குறிப்பாக நாம் இறக்கங்களில் கீழிறங்கும் போது உடுக்கை இழந்தவன் கைபோல நாம் விழுந்து விடாமிலிருக்க பெருந்துணையாக இருக்கின்றன. எங்களுக்கு மஹாதேவ் அமர்னாத் சேவா சமதியினர் கைத்தடியை இலவசமாக வழங்கினர். இல்லவிட்டால் தாருசூலாவில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளலாம்.

15. மற்ற அவசியமான பொருட்கள் : மேலும் கத்தி, கத்தரிக்கோல், தரமான செருப்பு, பாக்கட் டைரி, டாயிலெட் பேப்பர் முதலியன.

16. விருப்பபடி எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்: அவரவர்கள் வசதிப்படி, விருப்பப்படி கேமரா, வீடியோ கேமரா எடுத்துச் செல்லலாம். உயர் மட்டங்களில் பேட்டரிகள் சீக்கிரம் தீர்ந்து விடும் எனவே அதிகப்படியாக (extra) எடுத்துச் செல்வது நல்லது.

சீனப்பகுதியில் உங்களுடைய சார்ஜ் செய்யும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய பிளக் கிடையாது என்பதால் பல்ப் ஹோல்டர்களுடன் இனைந்த பிளக் எடுத்து செல்லலாம்.

குடை, பெட்ஷ“ட்(உல்லன்) நடைப்பயணத்தின் போது முழங்கால்களில், காப்பு ( Knee guard) அந்து நடந்தால் அவ்வளவாக அழுத்தம் முழங்கால் மேல் வருவதில்லை. இதை விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்துவர், ஆனால் நடைப்பயணத்தின் போது இது அடியேனுக்கு மிகவும் உதவி செய்தது. இந்த காப்பு அந்த நாட்களில் முழங்கால் வலி சிறிதும் இல்லாமலிருந்தது. கைலாஷ்- மானசரோவர் சமிதியினர் டெல்லியில் கையுறை, காலுறை முதலியவற்றை விற்ற போது முழங்கால் காப்பு, பாத மூட்டு காப்பு (Ankle guard) மற்றும் முழங்கை காப்பும் விற்றார்கள் தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள்.

மானசரோவர் தீர்த்தம் கொண்டு வர கேன் அல்லது பாட்டில், இவற்றை தக்லகோட்டிலும் வாங்கிக் கொள்ளலாம். அவற்றிலிருந்து தண்ர் ஒழுகாமல் இருக்க (žல் செய்ய) M-Seal அல்லது ஃபெவிகால் சில சமயம் குதிரைக்காரர்கள் எடையைக் குறைப்பதற்காக மானசரோவர் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு பின் நமது இருப்பிடம் வந்த உடன் வேறு தண்ரை ரப்பி தந்து விடுகின்றனர், எனவே கேன்களை žல் செய்வது மிகவும் அவசியம், உடையாத பிளாஸ்டிக் பாட்டிலாக இருந்தால் நம்முடைய பொருட்களுடனே வைத்து பேக் செய்து விடலாம்.

பச்சைக் கற்பூரக்கட்டி ( Smelling Camphor ) உயர் மட்டங்களில் பிராண வாயு குறைவு என்பதாலும் குறிப்பாக லிபு கணவாய் மற்றும் டோல்மா கணவாயில் பனி பெய்தால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இதை கைகுட்டையில் சுற்றி மக்கட்டில் கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமம் ஏற்படும் போது முகர்ந்து கொள்ள மூச்சு žராகும்., மானசரோவரில் நீராடும் போது குளிர் தெரியாமலிருக்க கடுகு எண்ணெய். கடுகு எண்ணெய்யை உடலில் தேய்த்துக் கொண்டு குளித்தால் குளிர் அதிகமாக தெரியாது ஆகவே 250 மி.லி கடுகு எண்ணெய், மற்றும் மூதாதையர்களுக்கு மானசரோவரில் தர்ப்பணம் கொடுக்க கருப்பு எள் ஆகியவற்றை டில்லியிலேயோ அல்லது தாருசூலாவிலோ வாங்கிக்கொள்ளலாம்.

17. உணவுப் பொருட்கள்: - இந்தியப்பகுதியில் நம்முடைய உணவையும், உறைவிடத்தையும் மற்றும் உடமைகளையும் KMVN றுவனம் தன்னுடைய பொருப்பில் ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் žனப்பகுதியில் தக்லகோட் என்ற இடத்தில் நாம் தங்கி இருக்கும் போது மட்டுமே உணவு வழங்குகின்றது அதுவும் žன உணவைத்தான் வழங்குகின்றனர் நம்மில் பலருக்கு அது சுவையனதாக அமைவதில்லை. மேலும் குறிப்பாக கிரிவலத்தின் போது நம்முடைய உணவை நாமே சமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அனைத்து குழுவினரும் ஒன்றாக இனைந்து பணம் சேர்த்து சமையல்காரர்களை வாடகைக்கு அமர்த்தி உணவு சமைத்துக் கொள்கின்றனர். சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை டில்லியிலிருந்தே வாங்கிச் செல்கின்றனர். நாங்களும் அவ்வாறே செய்தோம். ஆயினும் அந்த சமையல் காரர்களும் நம்முடனேயே நடந்து வருகின்றனர் என்பதாலும், அந்த குளிரில் எளிதில் சமையல் செய்ய முடியாது என்பதாலும் நமக்கு எளிதான உணவே கிடைக்கும். எனவே நம்முடன் ஜூஸ் பவுடர்கள், தாகத்தை தக்கும் புளிப்பு மிட்டாய்கள், பிஸ்கட்கள், சிப்ஸ், கார வகைகள், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், பேரீச்சம் பழம், சூப் பவுடர்கள், சாக்லேட்டுகள், சூயிங் கம், காபி பவுடர், பால் பவுடர், இனிப்புக்கள் போன்ற நொறுக்கு தீனிகள், கடலை மிட்டாய்கள், ரொட்டிகள் முதலியன எடுத்து செல்வது மிகவும் அவசியம். வழியில் வரும் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு வழங்க அவரவர்கள் விருப்பபடி சாக்கலேட் எடுத்து செல்லலாம்.

18.பூஜைப் பொருட்கள்: மேலும் பூஜைக்கு வேண்டிய சாமான்கள் அவரவர்கள் விருப்பப்படி எடுத்துச் செல்லலாம். அர்ச்சனைக்காக வில்வம், விளக்கு, பூஜை ம, பூஜை தட்டுக்கள், கற்பூரம், பத்திகள், நைவேத்தியத்திற்கு கல்கண்டு, முந்திரி பேரீச்சம் பழம் முதலிய நைவேத்திய பொருட்கள். பாராயண புத்தகங்கள் எடுத்து செல்லலாம். டோல்மா, மானசரோவர் கரை, அஷ்டபத் முதலிய இடங்களில் யாகம் வளர்த்து பூஜை செய்யலாம் என்பதால் அதற்கு வேண்டிய நெய், சமித்துக்கள், யாக பொருட்களை எடுத்து செல்லலாம். அங்கு பூஜையில் வைக்க வெள்ளியால் செய்த வில்வ தளங்கள், சிறு திரிசூலம் முதலியவற்றை எடுத்து செல்லலாம். தாங்கள் பூஜை செய்யும் சிறு மூர்த்திகளையும் எடுத்துச் செல்லலாம். யாகத்தின் போதும் மானசரோவரில் குளிக்கும் போதும் உடுத்த வேஷ்டி கொண்டு செல்வது உத்தமம். இப்புத்தகத்தின் இறுதியில் மொத்த பொருட்களின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

19.மருந்து மாத்திரைகள்: - சீனப்பகுதியில் மருத்துவ வசதி மிகவும் குறைவு என்பதால் நமக்கு வேண்டிய அவசியமான மருந்துகளை எடுத்து செல்வது மிகவும் அவசியம். காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, உடல், தலை வலி ஆகியவற்றுக்கு வேண்டிய மருந்துகள், தைலங்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்வது மிகவும் நலம் பயக்கும். C விட்டமின் மாத்திரைகள் சளியிலிருந்து காப்பாற்றும். மேலும் Band aid, காயத்திற்கு போடும் மருந்துகள் , electral powder , பஞ்சு முதலிய முதல் உதவிக்கு வேண்டிய பொருட்கள். இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும் மருந்து முதலியன எடுத்து செல்லலாம். எங்களுக்கு கைலாஷ்- மானசரோவர் சமிதியினர் இலவசமாக கொடுத்த இரண்டு பை மருந்துகளுடன் எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருந்ததனால் அவரும் இரண்டு பைகள் மருந்து கொண்டு வந்தார் எனவே நாங்கள் கொண்டு சென்ற மருந்துகளை அப்படியே திருப்பிக் கொண்டு வந்தோம் ஆயினும் எல்லா மருந்துகளையும் எடுத்து செல்வது நல்லது. உயர் லைகளில் வரக்கூடிய நோய்களை ( high altitude sickness) பற்றி அறிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு குழுவினருடன் ஒரு sleeping bag மற்றும் பிராண வாயு சிலிண்டர் எடுத்து செல்கின்றனர். உயர் மட்டங்களில் மட்டுமே ஏற்படும் நோய்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்வதும் நல்லது. அரசு அனுப்பும் கையேட்டில் இவை பற்றிய குறிப்புகள் உள்ளன. இணைய தலங்களில் சென்றும் இவற்றைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.


நாம் மொத்தம் ரூ15500/- KMVNக்கு செலுத்த வேண்டும், முதலிலேயே ரூ5000/- வரைவோலையாக அனுப்பிவிட்டதால் மீதி ரூ10500/- டெல்லியில் செலுத்த வேண்டி வரும், விசாவிற்காக ரூ200/-, டில்லியில் மருத்துவ பரிசோதனை கட்டணங்களுக்கு ரூ2000/- அன்னிய செலாவக்காக ரூ40000/- ( 601 அமெரிக்க டாலர் žன அரசுக்கு, மற்றும் žனப்பகுதியின் போர்ட்டர், குதிரை, மற்ற செலவுகள்), இந்தியப்பகுதியில் போர்ட்டர், மற்றும் குதிரைக்கு ரூ7500/- , மற்ற உதிரி செலவுகளுக்காக ரூ5000/- என்று மொத்தம் ரூ75000/- டெல்லி எடுத்து செல்ல வேண்டும். அடியேன் அன்னிய செலாவயை 800 அமெரிக்க டாலர்கள் சென்னையிலேயே HDFC வங்கியில் மாற்றி எடுத்துச் சென்றேன்.

மேலும் ஒரு Notary Public ன் முன்னால் கையெழுதிடப்பட்ட பிரமாண பத்திரத்தை (Indemnity Bond), அரசுக்கு நாம் அளிக்க வேண்டும். அதற்கான மாதிரி கையேட்டில் இருக்கும். அவரவர்களின் ஊரில் அதைப் பெற முடியாதவர்கள் இந்த பத்திரத்தை டெல்லியிலும் பெற்றுக் கொள்ளலாம்.



விண்ணப்ப படிவம் பெற இங்கே கிளிக்கவும்


காலை சூரிய ஒளியில் மின்னும் திருக்கயிலாயம்


தரிசனம் தொடரும்.......



கண்டேன் அவர் திருப்பாதம் -3


யாத்திரை செல்லும் வழிகள்



உத்தராஞ்சல் மாநிலம் வழியாக செல்லும் யாத்திரையின் வரை படம்
Route map of Kailash-Manasarovar yatra via Uttaranchal

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாம், சகல புவன ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார காரண, தேவ தேவனை, மஹா தேவனை, தோடுடைய செவியனை, விடையேறும் விமலனை, தூ‘வெண்மதி சூடும் முதல்வனை, பால் வெண்ணிறாடும் பரமனை, அன்பர் உள்ளம் கவர் கள்வனை, கபாலியாம் சிவபெருமானையும், நாயகி, நான்முகி, நாராயணி, கைநளின பஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு வாயகி, மாலினி, சூலினி, மாதங்கி, கற்பகமாம் அம்பிகையையும் அவர்கள் அருளாலும், பல ஜன்மங்களின் தவத்தின் பயனாலும், அவர் உறையும் திருக்கயிலாயம் சென்று தரிசிக்க இந்திய பிரஜைகளுக்கு இரண்டு வழிகள் உள்ளன அவை எவை என்று இந்த பதிவில் காணலாம்.



திருக்கயிலாய மலையானது திபெத்தில் எல்லை கடந்த இமயத்தில் இருப்பதால் நாம் இந்தியாவிலிருந்து செல்ல வேண்டுமென்றால் இமயமலையில் உள்ள ஏதாவது ஒரு கணவாயை (pass) கடந்து தான் செல்ல முடியும். ஜம்மு காஷ்மீர் தொடங்கி சிக்கிம் வரை உள்ள கணவாய்களுள் ஏதாவது ஒரு கணவாயை கடந்து நாம் கைலாயம் செல்ல முடியும் .






ஆதியில் ஹரித்வாரிலிருந்து, பத்ரிநாத், கேதார்நாத் , வழியாக நீதி கணவாய் ( 19000 அடி) கடந்து தீர்த்தபுரி வழியாக கைலாயம்-மானசரோவரை தரிசித்து லிபு கணவாய் வழியாக ஓம் பர்வதத்தை தரிசித்து அல்மோரா வழியாக திரும்பினர் இது மஹா பரிக்ரமா என்றும் அறியப்பட்டது.






மானசரோவர் உள்ளதால் மானஸ்கண்ட் என்று அழைக்கப்படும் உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள லம்பியா தூரா, நுவே தூரா, லோவே தூரா, உண்டா தூரா, ஜெயண்டி, குங்ரி பங்ரி என்னும் கணவாய்களில் ஏதாவது ஒன்றை கடந்தும் செல்லலாம். ஆனால் இப்போது திபெத்தை ஆளும் சீன அரசு இந்திய குடி மக்களுக்கு லிபு கணவாய் (Lipu Pass) வழியாக செல்வதற்கு மட்டுமே விசா வழங்குகிறது. இவ்வாறு லிபு கணவாய் கயிலாய பூமியின் நுழை வாயிலாக விளங்குகிறது.




முந்தைய காலத்தில் இமய மலை பிரதேசத்தின் வணிக இன மக்களான பூட்டியா இன மக்கள் இந்த பாதையையே வர்த்தகத்திற்காக பயன் படுத்தினர். குளிர் காலத்தில் இந்த கணவாய் பனியால் மூடப்பட்டு விடுகின்றது. இளவேனிற் காலத்தில் பனிகட்டி உருகி வழி ஏற்படுகின்றது எனவே ஆனி, ஆடி, ஆவணி மாதங்கள் தான்( June to September) இந்த யாத்திரைக்கு ஏற்ற மாதங்கள். இந்த வருடம் (2006 ஜூலை மாதம்) சிக்கிமில் உள்ள நாதுல்லா கணவாயும் வணிகத்திற்காக திறக்கப்படுவதால் இனி மேல் அது மூலமாகவும் சீன அரசு யாத்திரிகளை அனுமதிக்கும் வாய்ப்பு உள்ளது, அவ்வழியாக செல்லும் போது நடைப்பயணம் மிகவும் குறையும் ஆனால் ஜ“ப் பயணம் அதிகமாகும்.




நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு பாலம்
Beautiful bridge and park across a river


எனவே இந்திய குடி மக்களுக்கு திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள தற்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன முதலாவது இந்திய அரசு நடத்தும் யாத்திரை, இந்த யாத்திரை லிபு கணவாய் வழியாக நடைபெறுகின்றது. 28 நாட்கள் அதில் சீனப்பகுதியில் 12 நாட்கள், மேலும் மூன்று நாட்கள் டெல்லியில் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாவிற்காக தேவைப்படும் ஆக மொத்தம் 31 நாட்கள். சுமார் 200 கி. மீ து‘ரம் நடைப்பயணம் அல்லது மட்டக் குதிரையில் (pony) பயணம் செய்ய வேண்டி வரும். கடினமான பயணம்தான் ஆனால் எம்பெருமான் செம்பவள மேனி வண்ணண், கரும் பண கச்சைக் கடவுள், நச்சரவாட்டிய நம்பன், தேசன் சிவலோகன், வெண்ணிறாடி, மை நீல கண்டன் அழைத்து உடல் நலக்கோளறு ஒன்றும் இல்லாமல் இருந்தால் அவனருளால் அருமையாக யாத்திரையை முடிக்கலாம்.




அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை ஊழியர்களுக்கும் இந்த அரசு நடத்தும் கைலாய யாத்திரை மேற்கொள்வதால், கிடைக்கும் மற்றுமொரு போனஸ் 30 நாள் தனி விடுப்பு. (Special casual leave) கைலாயம் žனாவில் வருவதால், வெளி நாடு செல்வதற்கான அனுமதி யாத்திரைக்கு முன்பே பெற வேண்டும்.



ஜனவரி மாத கடைசி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் எல்லா நாளிதழ்களிலும் திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது நிரம்பியவர்களும் 70 வயதை தாண்டாத இந்திய குடி மக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 15 ம் தேதி இறுதி நாள். விண்ணப்பப் படிவங்களை KMVN.org அல்லது kmyatra.org என்ற இணைய தலங்களிலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். இவ்விரண்டு இணைய தலங்களிலும் இந்திய அரசின் கைலாஷ்-மானசரோவர் பற்றிய முழு விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நலம் இருப்பவராய் இருத்தல் மிகவும் அவசியம்.




திருக்கயிலாய மலையின் சுற்றுப்பாதை 5000 மீட்டருக்கு மேல் உயரமானதால் அங்கு பிராண வாயு குறைவாக உள்ளது, மேலும் காற்றின் அழுத்தமும் உயரத்தில் செல்ல செல்ல குறைவு எனவே உடல் நலம் நன்றாக இருப்பது முக்கியம். குறிப்பாக, இதய நோய், ஆஸ்த்மா, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறு நீரக கோளாறு, வலிப்பு நோய் உள்ளவர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 16 குழுக்கள் அனுப்பபடுகின்றன. ஒவ்வோரு குழுவிலும் அதிக பட்சம் 40 பேர். இதிலே 44 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் 19 பேர் பெண்கள், 25 பேர் ஆண்கள். 2006 வருடத்திலிருந்து இந்த எண்ணிக்கை அதிக பட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் மருத்துவ பரிசோதனையைப் பொறுத்து குழுவினரின் எண்ணிக்கை மாறுபடும். ஏனென்றால் žனப் பகுதியில் உள்ள தங்குமிடங்களில் 30 பேருக்கு மேல் தங்குவது கடினம் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.



முதல் குழு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் கிளம்புகின்றது. பின் ஒவ்வொரு வாரமும் அடுத்த குழு கிளம்புகின்றது. 16வது குழு செப்டெம்பர் 15 தேதி செல்கின்றது. அடியேனுக்கு 2005ம் வருடத்திய 14ம் குழுவில் செல்லும் பாக்கியம் கிடைத்தது.எங்கள் யாத்திரை ஆகஸ்ட் மாதம் 15 நாள் தொடங்கி செப்டம்பர் மாதம் 12 தேதி வரை நடை பெற்றது. விண்ணப்பித்தவர்களிலிருந்து கணணி மூலம் யாத்திரை செல்பவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அந்த எம்பெருமான், கயிலாயபதி, உமாபதி, பசுபதி, சிவகாமிபதி, கௌரிபதி, அம்பிகாபதி தன்னுடைய இல்லத்திற்கு யார் யார் வரவேண்டும் என்று தானே முடிவு செய்கிறார். பின்னர் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனே தந்தி மூலம் இந்த செய்தி அறிவிக்கப்படுகின்றது. ஆனால் இப்போதைய உலகம் இன்டெர்னெட் உலகம் எனக்கு செய்தி கிடைத்தை இ-மெயில் மூலமாக.சென்னையிலுள்ள குமான் மண்டல அபிவிருத்தி கார்ப்பரேசன் (KMVN) மூலமாக எம்பெருமானுடய அழைப்பை பற்றிய செய்தி எனக்கு வந்தது. குமான் மண்டல அபிவிருத்திக் கழகம், உத்தராஞ்சல் அரசின் சுற்றுலா நிறுவனம் யாத்திரிகளின், உணவு, தங்கும் இடம், வாகன வசதி அனைத்துயும் கவனித்துக் கொள்கின்றது. இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ITBP) யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது.



இரண்டாவது வழி நேபாள தேசம் வழியாக செல்வது. இவ்வழியில் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை யாத்திரை செய்யலாம். இதை தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாக நடத்தப்படுகின்றன. இந்த பயணம் மொத்தம் 21 நாட்கள். செலவு கிட்டத்தட்ட ரூ50000/- முதல் 60000/- வரை ஆகின்றது. சென்னையிலிருந்து பெங்களுருக்கு சென்று அங்கிருந்து காத்மாண்டுவிற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்கின்றனர். இவ்யாத்திரையில் நடை பயணம் மிகவும் குறைவு ஆனால் கிரி வலத்தின் போது நடந்தோ அல்லது யாக் , மட்டக் குதிரை மூலமாகவே செல்ல வேண்டும். இந்த யாத்திரையில் உள்ள ஒரு குறைபாடு இது தான். திடீரென்று நடை பயணம் அதுவும் 5000 மீட்டர் உயரத்தில் மேற்கொள்ளும் போது பலருக்கு துன்பங்கள் ஏற்படுகின்றன. காத்மாண்டுவிலிருந்து லேண்ட குரூசியர் எனப்படும் ஜ“ப் வாகனத்தில், ஒரு ஜ“ப்பில் 4 பேர் கொண்ட குழுவினராக அனுப்புகின்றனர். உங்களுடைய சொந்த பொருட்கள், உணவுப்பொருட்கள், தங்கும் டெண்ட்(tent) முதலிய எல்லா பொருட்களும் உங்களுடனே லாரிகளில் செல்கின்றன. காத்மண்டுவிலிருந்து ஜங்மூ, நைலம், லாலங் கணவாய் (5124 மீ உயரம் ) , பேங்தாசே , இது வரை பிரம்மபுத்திரா நதியை ஒட்டியே யாத்திரை நடைபெறுகின்றது இப்போது நதியை படகு மூலமாக கடக்கின்றனர், ஜ“ப்களும் படகு மூலமாக அடுத்த கரைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் சாகாவிலிருந்து பிரயாங், மஜோம் கணவாய் (5370 மீ உயரம் ) வழியாக மானசரோவரின் ஹோரேவை (Hore) அடைகின்றனர். பின் மானசரோவரை வலம் வந்து கைலாய மலையின் டார்சென் முகாமை அடைந்து கயிலங்கிரிவலம் முடித்து பின் மானசரோவரை சுற்றிக்கொண்டு வந்த வழியாகவே காத்மண்டு அடைகின்றனர். இவ்வழியிலும் இயற்கையின் žற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது இவர்களும் நிலச்சரிவுகளை சந்திக்கின்றனர். ஜ“ப் செல்லும் வழி தார் சாலை அல்ல வெறும் கற்களைப்பரப்பி ஏற்படுத்தப்பட்ட சாலை, தூசியும் வழியில் அதிகம். தினமும் எலும்புகளை நொறுக்கும் (bone rattling) அந்தப் பாதையில் சுமார் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி வரும். முகம் முழுவதும் தூசி நிறையும் எனவே மூக்குக் கவசம் அணிவது அவசியம். žதோஷ்ண நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் உள்ளது, நடைப்பயணம் மட்டும் இல்லை, அதுதான் பெரிய வித்தியாசம். மற்றபடி யாத்திரை நாட்கள் குறைவு, காத்மாண்டிலுள்ள பசுபதி நாதர் கோவில், பள்ளி கொண்ட பெருமாள் கோவில் முதலியவற்றை நீங்கள் இந்த யாத்திரையில் தரிசனம் செய்யலாம். ஆனால் ஓம் பர்வதம், மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தின் பல ஸ்தலங்களை நீங்கள் தரிசிக்க முடியாது. காத்மாண்டுவில் உள்ள ECO Trek Pvt International Ltd என்ற நிறுவனம் யாத்திரைக்கான அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றது.



நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் நட்புப் பாலம்
Friendship bridge connecting Nepal and China



காத்மாண்டுவிலிருந்து ஹெலிகாப்டரிலும் செல்லும் வசதி உள்ளது. ஆனால் அதற்கு ஆகும் கட்டணம் மிகவும் அதிகம் (2 இலட்சத்திற்கும் மேலாகும்). 9 நாட்கள் மற்றும் 12 நாள் யாத்திரைகள் காத்மண்டுவிலிருந்து தனியார் சுற்றுலா நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன அவர்கள் காத்மாண்டுவிலிருந்து சிறு விமானங்கள் மூலமாக நேபாள்கஞ் சென்று அங்கிருந்து சிமிகோட்வரை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஹால்சாவரை அழைத்துச் செல்கின்றனர், பின்னர் ஜ“ப் (land cruisers) மூலமாக, லாசா வழியாக மனசரோவரை அடைகின்றனர். ஹெலிகாப்டரில் செல்வதை தவிர்க்கவும், ஏனென்றால் நமது உடம்பு அந்த உயர் நிலைக்கு (high altitude) தயாராகாது என்பதால். மெல்ல மெல்ல உயரத்தில் செல்வதுதான் நல்லது. எனவே தான் அரசு நடத்தும் யாத்திரையில் செல்வது நல்லது. எந்த வழியாக சென்றாலும் இந்த யாத்திரையை வெற்றிகரமாக முடிக்க மனம், உடல், தனம் மூன்றும் வேண்டும்.

கண்டேன் அவர் திருப்பாதம் -2

HOLY KAILASH & MANASAROVAR

Aerial view of Kailash - வானத்திலிருந்து கையிலங்கிரி காட்சி( ஈசான முகம்)


யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதியான ஸ்ரீ ருத்ரத்திலே சிவபெருமான் கைலாய வாசன் என்பதை கிரிஸந்தா, கிரித்ரா, கிரிஸாச்சா, நமோ கிரிஸாய ச என்ற தொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகின்றன. இம்மலையின் பெருமையைப் பற்றி காளிதாசர் தமது குமாரசம்பவத்திலே இவ்வாறு பாடுகின்றார். "வடக்கிலே அமைந்துள்ளது ஒரு பெரிய மலை, எப்போதும் பனியினால் போர்த்தப்பட்ட மலை, தெய்வீகம் பொருந்திய மலை, கிழக்கு கடலிலிருந்து மேற்கு கடல் வரையில் விரிந்து பரந்துள்ள விசாலமான மலை" இம்மலையின் புனிதத்தன்மையை பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், சிவ புராணம், இராமாயணம், உபநிடதங்கள் முதலியவற்றில் உள்ளன. இம்மலை "பூலோக மேருவாக" கருதப்படுகின்றது.


சிவ பெருமானும் பார்வதி தேவியும் நித்திய வாசம் செய்யும் தலம் இது. இராமாயணத்தில் இமய மலைக்கு இனையான மற்றொரு மலை இல்லை ஏனென்றால் அதன் உச்சியிலே அது பரம பவித்ரமான கைலாயத்தையும், மானசரோவரையும் கொண்டுள்ளது, கைலாய பர்வதத்தை தரிசனம் செய்தவுடனே ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சமயம் தத்தாத்ரேயர் கயிலங்கிரி யாத்திரை மேற்கொண்டார், அவர் புண்ணிய மானசரோவரில் நீராடி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் தரிசனம் செய்த பின், சிவபெருமானிடம் வினவினார் " பிரபோ, இப்பூவுலகில் பவித்ரமான சேத்திரம் எது? " என்று அதற்கு கருணைக்கடலான எம்பெருமான் பதில் கூறினார், "கயிலாயம் மானசரோவர் தான் இப்புவுலகில் பரம பவித்ரமான தலம். அதை தரிசனம் செய்ய வேண்டியது கூட இல்லை அதை பற்றி நினைப்பவர்களின் பாவம் அனைத்தும் அதே நொடியில் விலகி விடுகின்றது" என்று இத்தலத்தின் சிறப்பை தமது திருவாயினாலே கூறி அருளினார். எனவே தீர்த்த யாத்திரைகளின் சிகரமாக இந்த கைலாஷ்-மானசரோவர் யாத்திரை கருதப்படுகின்றது. 


சொர்க்க லோகத்திலிருந்து பூமியில் இறங்கிய புனித கங்கையை சிவபெருமான் தமது ஜடாமுடியில் தாங்கி இறக்கியது இம்மலையில் தான். இன்றும் கைலாயத்தின் žதள நீரினால் உருவாகும் சந்தோத் என்னும் தடாகத்தில் இருந்து உருவாகும் யமனின் சகோதரியான அலக்நந்தா என்ற ஆறு பத்ரிநாத் அருகில் ஓடி பின்னர் பகீரதியுடன் கலக்கின்றது பின் கங்கையுடன் கலக்கின்றது என்பது ஐதீகம்



South face of Holy Kailash - தக்ஷ’ணாமூர்த்தி தரிசனம்- கயிலாய தெற்கு முகம் (அகோர முகம்) கணேசருடன்



இவ்வாறு இந்தியாவிற்கு சிகரமாயுள்ள இமய மலையின் கொடுமுடியாய் திகழ்வது கயிலயங்கிரி. அதற்கு அருகில் அமைந்துள்ளது மானசரோவரம் எனப்படும் தடாகம். இரண்டும் சேர்ந்து "கௌரி சங்கர்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டையும் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி என்பது கிடையாது என்பது ஐதீகம். 

மேலும் அந்த பெருமான் அழைத்தால் மட்டுமே அந்த தேவ பூமிக்கு நாம் செல்ல முடியும். அடியேன் பல் வேறு கட்டுரைகளில் கையிலாயம் சென்றும் கூட பெருமானை மேக மூட்டத்தால் தரிக்காமல் திரும்பி வந்தவர்களை பற்றி படித்துள்ளேன். எல்லாம் அவன் செயல். நாம் இந்த பூத உடலுடன் திருக்கயிலாயம் மட்டுமே செல்ல முடியும், சத்ய லோகமோ, வைகுண்டமோ, ஸ்ரீ புரமோ, நாம் உடலுடன் செல்ல முடியாது. அதுவும் நம்முடைய பல ஜன்மங்களின் புண்ணியங்களின் பலனாகவும், நமது பித்ருக்கள் மகிழ்ந்து செய்யும் ஆசியினாலுமே, கடைசி ஜன்மத்தில் மட்டுமே கைலாய தரிசன பிராப்தி கிடைக்கின்றது என்பது ஐதீகம். சூரியனைக் கண்டதும் பனி விலகுவது போல கயிலையை தரிசித்தவுடன் ஒருவருடைய பாவங்கள் எல்லாம் விலகுகின்றன. எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும்.

Waves sparkling like diamond during noon
மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.






மானசரோவரில் நீராடுவதைப் பற்றி இராமாயணத்திலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது "மானசரோவரின் மண்ணானது எவருடைய உடலில் படுகின்றதோ அல்லது யார் மானசரோவரில் நீராடுகிறார்களோ அவர்கள் பிரம்ம லோகத்தை அடைகின்றார். யார் மானசரோவரின் தீர்த்தத்தை பருகுகின்றனரோ அவர்கள் சிவசாயுஜ்யத்தை அடைவதுடன் நு‘று ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர் . அதன் நீர்த்துளிகள் முத்து போன்றவை." இவ்வளவு சிறப்பு வாய்ந்த, இத்தகைய புனிதங்களுடைய யாத்திரையை யாத்திரைகளுக்குள் எல்லாம் தலை சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.


மத்திய அரசு நடத்தும் யாத்திரையில் ஒரு வருடத்திற்கு சுமார் 300-400 பேருக்கு மட்டுமே யாத்திரைக்கு வாய்ப்பு கிடைக்கின்றது எனவே இந்த யாத்திரைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அந்த பெருமானாலேயா தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது உண்மையே. நாமே சங்கர ஸ்வரூபம் ஆனால் ஒழிய சங்கரரின் தரிசனம் கிடைக்காது எனவே ஒருவர் கைலாய யாத்திரை செய்தால் அது அவரது வாழ்வின் ஒரு மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.



Kailash Sunlit North Face - சூரிய ஒளியில் தங்கமென மின்னும் வடக்கு முகம் (வாம தேவ முகம்)


மானசரோவர் தடாகம் நான்முக பிரம்ம தேவர் தமது மனத்திலிருந்து உருவாக்கியது தான் மனசரோவர். மனஸ் - என்றால் மனது, சரோவர் என்றால் குளம், எனவே தான் இது ஆதி காலத்தில் பிரம்மாசர் என்றும் அழைக்கப்பட்டது. சமுத்திர மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மனசரோவர் தடாகம் 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. இதன் சுற்றளவு 110 கி, மீ ஆகும். கைலாயத்தின் தெற்கே 30 கி. மீ து‘ரத்தில் அமைந்துள்ளது இத்தடாகம். இதன் தென் புறம் இன்னோரு வெள்ளிப்பனி மலையான குர்லா மந்தாதா மலைத் தொடர்கள் உள்ளன. ம நீல வண்ணத்தில் மின்னும் இத்தடாகம் பல் வேறு உணர்ச்சிகளை காட்டுகின்றது. மிடத்திற்கு மிடம் இதன் வர்ணம் மாறுகின்றது , அந்த அழகை வர்க்க வார்த்தைகளே இல்லை. அதுவும் பௌர்ணமி காலங்களில் கோடிக் கோடி நட்சத்திரங்களை தன் தண்ரில் பிரதிபலிக்கும் அழகே அழகு. காற்று அதிகம் மாசுபடாததாலும், உயரம் அதிகம் என்பதாலும் அதிக நட்சத்திரங்களை இரவில் நாம் இங்கு காணலாம்.

மானசரோவரத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுகின்றனர் பெரியோர். அம்மை இங்கே மானஸாதேவியாக (சிலர் தாக்ஷ‘யி என்பர்) எழுந்தருளி அருள் பாலிப்பதாக ஐதீகம். சதி தேவியின் இடது குதிகால்பாகம் விழுந்த பீடமே மானசரோவர் சக்தி பீடம். ஒரு சிலர் அம்மையின் இடது கை இங்கு விழுந்ததாகவும், அக்கரம் விழுந்த வேகத்தில் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டதாகவும், பின்னர் பிரம்ம தேவர் அந்த பள்ளத்தை மானசரோவர் ஏரி ஆக்கினார் என்றும் நம்புகின்றனர்.

வைணவ சம்பிரதாயத்திலே மானசரோவரம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான திருப்பிரிதி என்னும் திவ்ய தேசம் என்பது ஐதீகம். ஆனால் இப்போது அங்கு அம்மன் கோவிலோ அல்லது பெருமாள் கோவிலோ இல்லை மானžகமாகதான் நாம் அவர்களுக்கு பூஜை செய்ய வேண்டும் žனப்புரட்சியின் போது அவை அழிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே இந்துக்களில் அறு சமயத்தினருக்கும் மானசரோவரம் அனாதி காலம் முதல் பரம புண்ய தலமாக விளங்குகின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை.


திபெத்தியர்கள் இத்தடாகத்தை சோ- மஃபம் (Tso-Mapham) அல்லது சோ-மவாங் (Tso-Mavang) அதாவது விலை மதிப்பற்ற ஏரி என்று அழைக்கின்றனர். புத்தரின் தாயான மாயா தேவியை தேவர்கள் இத்தடாகத்தில் நீராட்டி புனிதம் செய்த பின்னரே புத்தர் இவர் வயிற்றில் வெள்ளைக் குதிரையில் வந்து கருக்கொண்டதாக நம்பப்படுகின்றது.

இன்றும் இரவிலே பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள் தேவதைகள் நட்சத்திர ரூபத்தில் இத்தடாகத்திலே நீராடிகைலாச வாசனை, கனக சபேசனை, ஸ்மசான வாசனை, நீல கண்ட மஹாதேவனையும், பூர, மானோன்ம, தயாபரி, அம்பிகையும் வணங்கிச் செல்வதாக நம்பப்படுகின்றது. திருக்கயிலாய யாத்திரை செல்லும் பல் வேறு யாத்ரீகர்கள் இந்த அற்புத அனுபவத்தை நேரில் கண்டுள்ளனர்.

இனி மானசரோவர் எவ்வாறு உருவானது என்பதற்கான புராண கதைகளை பார்ப்போமா? ஒரு சமயம் பிரம்மாவின் புத்திரனான முனிவர் மற்றும் பல முனிவர்கள் இம்மலையில் சிவ பெருமானை குறித்து தவமியற்றினர் 12 வருடங்கள் கழித்து சிவபெருமானும் பார்வதியும் காட்சி கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு பூஜை செய்ய அந்த மலையில் தண்ர் இல்லாததால் முனிவர்கள் அனைவரும் பிரம்மாவை வேண்ட அவரும் தனது மனதின் சக்தியினால் மானசரோவர் தடாகத்தை ஏற்படுத்தினார் அப்போது அந்த நீரிலிருந்து ஒரு சொர்ண லிங்கம் தோன்றியது என்பது ஒரு ஐதீகம். பின் முனிவர்கள் இந்த சொர்ண லிங்கத்தை வழிபட்டனர் என்பது ஐதீகம்.

இந்த புண்ய பூமியில் ஒரு சமயும் இலங்காதிபதி இராவணனும், வியாச முனிவரின் சிஷ்யர்களும் தவமியற்றிக் கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் இராவணன் உருவாக்கிய ராக்ஷஸ் தால் என்ற தடாகத்தின் தண்ரை உபயோகப் படுத்தக் கூடாது என்று அவன் மறுத்ததால், முனிவர்கள் வேண்ட பிரம்மா இத்தடாகத்தை உருவாக்கினார். அதிலே பிரம்மா ராஜ அன்னப்பறவையாக வலம் வந்தார். இன்றும் மானசரோவரில் ராஜஅன்னப்பறவையை காண்பவர்கள் பிரம்மாவையே இம்மானசரோவரில் பூக்கின்றன. வைணவ மஹா புருஷரான ஸ்ரீமந் கமாந்த தேசிகர் தமது ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் "மநீஷாணாம் மானஸ ராஜ ஹம்ஸம்" என்று அருளிச் செய்துள்ளார். அதாவது 'ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! ராஜ ஹம்ஸம் என்னும் பறவை மானஸம் என்னும் பொய்கையிலே விளங்குவது போல தாங்கள் ஆத்ம ஞானிகள், பெரியோர் களின் உள்ளம் என்னும் தூய்மையான பொய்கையில் நீர் என்று அருள் புரிகின்றீர் என்பது அடியேன் படித்தது.


சுவாமி பிரனாவானந் அவர்கள் "மானசரோவர் மிகவும் புனிதமான தடாகம், மிகவும் பழமையானது, நாகரீகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தடாகம். வெள்ளியாக மின்னும் இரண்டு பெரிய மலைகளான கைலாயம் மற்றும் குர்லா மந்தாதா மலைகளுக்கு நடுவே அதன் சகோதரியான இராக்ஷ்ஸ் தால் எனப்படும் மற்றொரு தடாகத்துடன் எழிலாக விளங்குகின்றது இந்த புகழ் பெற்ற ஏரி என்கிறார். "

மானசரோவர் தடாகத்தை வலம் வர பேருந்தில் இரண்டு நாட்கள் ஆகின்றன. மானசரோவரை சுற்றி 8 புத்த விகாரங்கள் உள்ளன. வலம் வரும் போது வண்ண வண்ண மணலையும், பலவிதமான கற்களையும் நாம் காணலாம். இக்கரையில் கிடைக்கின்ற கல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பது ஐதீகம். கணேசர், கைலாயமலை, மானசரோவர், ஓம் பொறித்த கற்கள், சங்கு வடிவம் என்று அவரவர்கள் கர்ம பலனுக்கேற்ப பலவகையில் கற்கள் கிடைக்கின்றன. இயற்கை அளித்த ஒரு அற்புத அன்பளிப்பு இந்த மானசரோவர் தீர்த்தம், இதில் நீராடுவது மிகவும் புண்யமானது. உடலும் மனமும் பவித்ரமடைகின்றது. பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மானசரோவரில் செய்வது மிகவும் விசேஷமானது. ஹ’ந்துக்கள் வசந்த காலத்தில் மட்டுமே மானசரோவரை கிரி வலம் வருகின்றனர், ஆனால் திபெத்தியர்கள் குளிர் காலத்திலும் தடாகம் உறைந்துள்ள பனியாக இருக்கும் போதும் கிரிவலம் வருகின்றனர். ஆனால் திபெத்தியர்கள் இத்தடாகத்தில் குளிப்பதில்லை, ஏனென்றால் இதன் தண்ர் தேவர்களுக்கு ஏற்பட்டது என்பது இவர்கள் நம்பிக்கை, ஆனால் தண்ரை இவர்கள் அருந்துகின்றனர். திபெத்திய புராணங்களின் படி பூமியாகிய விராட புருஷனின் தொப்புள் கொடி இந்த மானசரோவர் தடாகம். இந்த தாடாகத்திலிருந்து நான்கு திசைகளிலும் நான்கு ஆறுகள் பாய்கின்றன. வடக்கிலிருந்து சிங்க முக நதி. கிழக்கிலிருந்து குதிரை முக நதி, தெற்கிலிருந்து மயில் அலகு நதி, மற்றும் மேற்கிலிருந்து யானை வாய் நதி, நமது விஷ்ணு புராணத்திலும் திருக்கைலாயத்திலிருந்து நான்கு நதிகள் நான்கு திசைகளில் பாய்வதாக கூறியுள்ளதை இதனுடன் ஒப்பிடலாம்.




இராக்ஷஸ் தால்
கனகமா வயிரம் உந்து மாக்கக் கயிலை கண்டும்
உனகனாய் அரக்கன் ஓடி எடுத்ததும் உமையாள் அஞ்ச
அனகமாய் ன்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் - என்ற படி
அசுரனான இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்த போது உருவாக்கியது இராக்ஷஸ் தால் எனப்படும் தடாகம், இதன் நடுவிலே ஒரு தீவு உள்ளது அதிலே அமர்ந்து தான் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்ததாக கூறப்படுகின்றது. எனவே இதை இராவண குளம் என்றும் அழைப்பர். குர்லா மாந்தாதா மலைத்தொடர்களுக்கு — தற்கே மானசரோவரின் இந்த இரட்டை ஏரி உள்ளது. இதுவும் மிகவும் விலாசமான ஏரி. இத்தடாகம் 288 சதுர கி மீ பரந்துள்ளது. இதன் சுற்றளவு 122 கி மீ. ஆழம் 300 அடிகள். உயரம் 4515 மீட்டர். இந்த தண்ர் அசுர குணம் கொண்டது என்பதால் இதை நாம் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உபயோகப்படுத்துவதில்லை. ஆதி காலத்தில் இதன் தண்ர் விஷத்தன்மை பொருந்தியதாக இருந்தது. பின்னர் மானசரோவரிலிருந்து வந்த ஒரு சொர்ண மீன் ஒரு பாதையை உருவாக்கி இரண்டு ஏரிகளையும் இணைத்த பின் இதன் தண்ரும் நல்ல நீராக மாறியது. அந்த கால்வாய் கங்கா- சூ என்று அழைக்கப்படுகின்றது.இதன் நீளம் 6 கி மீ . கங்கா- சூ வில் எப்போதும் தண்ர் பாய்வதில்லை. எந்த வருடம் தண்ர் ரம்புகின்றதோ அந்த வருடம் உலக மக்கள் மிகவும் சுபிக்ஷமாக இருப்பார்கள் என்பது ஐதீகம். சட்லஜ் நதி இத்தடாகத்திலிருந்து தான் உற்பத்தியாகின்றது.இந்திய அரசு நடத்தும் யாத்திரையில் செல்லும் போது நமக்கு திருக்கயிலாய மலையின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது. மானசரோவர் பகல், சூரியன், வெளிச்சம், ஞானம், நன்மையைக் குறிக்கின்றது என்றால் இராக்ஷஸ் தால் இரவு, சந்திரன், இருள், அஞ்ஞானம், தீமையைக் குறிக்கின்றது. இவ்வாறு தேவ தன்மையும் அசுர தன்மையும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது நமது வாழ்க்கை நன்மையும் தீமையும் சேர்ந்ததே, ஆனால் நாம் நன்மையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் முகமாக உள்ளது.



கண்டேன் அவர் திருப்பாதம் -1

ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம்

AAERIAL VIEW OF HOLY KAILASH 
காணப் பிறவிகள் ஆயிரம் தவம் செய்தல் வேண்டும், கண்ட பின் உண்டோ பிறவியும் என்று ஞானிகள் அருளியபடி திருக்கயிலாய தரிசனமும், மானசரோவர் ஸ்நானமும் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பேராகும். அந்த தரிசனத்தின் திருக்காட்சிகளை இது வரை கண்டு களித்தீர்கள் இனி யாத்திரையை பற்றி முழுமையாக படித்து மகிழுங்கள்.






பார்வதியின் தாய் வீடு இமயமலை
இப்பதிவில் திருக்கயிலாயமும் மானசரோவரும் அமைந்துள்ள பார்வதி அம்மையின் பிறந்த வீடான இமய மலையின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.


சிற்றம்பலம் என்பது ஒரு பரமார்த்திக நிலை. இப் பெயர் கொண்ட தலம் சிதம்பரத்தில் உள்ளது. ஆனால் திருக்கயிலாயமோ இயற்கையாகவே லிங்கமாக, உள்ளது. எனவே இமய மலையிலே வருடம் முழுவதும் பனி நிறைந்துள்ள சிகரமான கைலாயத்தை நாம் சிவபெருமானாகவே வழிபடுகின்றோம்.

" யோ ருத்ரோ அக்நௌ யோ அப்ஸ”யேஓஷதீஷ• யோ ருத்ரோவிஸ்வா புவநா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து "
எந்த ருத்ரன் அக்னி, நீர், செடி, கொடி(மூலிகைகள்), மரம், மற்றும் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி நிலைத்திருக்கின்றாரோ அந்த ருத்ர பகவானை வணங்குகிறோம் என்று ஸ்ரீருத்ரத்திலே சிவபெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. அவர் பார்வதியம்மையுடன் நித்ய வாசம் செய்யும் தலம் தான் தான் திருக்கயிலாயம்.




நமது நாட்டின் வடக்கு எல்லையும் அரணுமான இமயமலையே புராணங்களின் படி பார்வதியின் தாய் வீடு. ஸ்ரீ லலிதா அஷ்டோத்தரத்தில் ஒரு நாமாவளி “ஹ’மாசல மஹா வம்ச பாவனாயை நமோ நம:, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் உமா சைலேந்த்ர தனயா. உமையம்மை மலைகளுக்கெல்லம் அரசனான இமய மலையின் அரசன் இமவான் மகளாக பிறந்து, வளர்ந்து விளையாடி தவமிருந்து சர்வேச்வரனை கை பிடித்த இடம். எனவே அம்பிகைப்பற்றி பாடும் போது ஆதி சங்கர பகவத் பாதாள் இமஹ’ரி சுதே, என்றும் கிரி கன்யே என்றும், சைல சுதே என்றும் அன்பொழுகப் பாடுகின்றார். அபிராமி பட்டரும் அபிராமி அம்பிகையை சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை, என்று பாடுகின்றார். பர்வதங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இமய பர்வதத்தின் இராஜனுக்கு மகளானதால் அம்மை பார்வதி என்றும் அழைக்கப்படுகின்றாள். எம்பெருமானை மாணிக்க வாசகரும் தமது திருவாசகத்திலே மலைக்கு மருகனைப்பாடி நாம் தேள்ளேணம் கொட்டோமோ என்று பாடுகின்றார்.
இனி புவியியலின் படி , உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் இளைய மலை இமய மலை தான். இம்மலை சுமார் 30 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. ஹ’ம் என்றால் பனி என்று அர்த்தம் எனவே எப்போதும் அந்த பனி நிறைந்த மலைக்கு ஹ’ம் + ஆலயம் , இமாலயம் என்று பெயர் ஏற்பட்டது. எப்போதும் பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர் அதிகமாக சிதைவு அடையவில்லை. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் து‘ரம் விரிந்து பரந்துள்ளது. இந்த மலைத்தொடர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும். இந்து மஹா சமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாக மாற்றியுள்ளது இம்மலைகள். அகழ்வாராச்சியின் மூலமாக முதன் முதலில் நாகரீகம் இந்த இமய மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆற்றின் கரையோரங்களில் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமயமலைதான். இம்மலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன சிறிய இமயம், பெரிய இமயம், எல்லை கடந்த இமயம். இவற்றில் கைலாயம் எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளது. பெரிய இமயத்தின் தென் பகுதில் மற்ற இமய மலையின் புண்ணிணிய தலங்களான ரிஷ’கேசம், திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம். கங்கோத்ரி, யமுனோத்ரி முதலியவை உள்ளன.

இனி கைலாய மலையின் பெருமைகளைப்பற்றி பார்ப்போம். யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதியான ஸ்ரீ ருத்ரத்திலே சிவபெருமான் கைலாய வாசன் என்பதை கிரிஸந்தா, கிரித்ரா, கிரிஸாச்சா, நமோ கிரிஸாய ச என்ற தொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகின்றன. இம்மலையின் பெருமையைப் பற்றி காளிதாசர் தமது குமாரசம்பவத்திலே இவ்வாறு பாடுகின்றார். "வடக்கிலே அமைந்துள்ளது ஒரு பெரிய மலை, எப்போதும் பனியினால் போர்த்தப்பட்ட மலை, தெய்வீகம் பொருந்திய மலை, கிழக்கு கடலிலிருந்து மேற்கு கடல் வரையில் விரிந்து பரந்துள்ள விசாலமான மலை" இம்மலையின் புனிதத்தன்மையை பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், சிவ புராணம், இராமாயணம், உபநிடதங்கள் முதலியவற்றில் உள்ளன. இம்மலை "பூலோக மேருவாக" கருதப்படுகின்றது. சிவ பெருமானும் பார்வதி தேவியும் நித்திய வாசம் செய்யும் தலம் இது. இராமாயணத்தில் இமய மலை€க்கு இனையான மற்றொரு மலை இல்லை ஏனென்றால் அதன் உச்சியிலே அது பரம பவித்ரமான கைலாயத்தையும், மானசரோவரையும் கொண்டுள்ளது, கைலாய பர்வதத்தை தரிசனம் செய்தவுடனே ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 6, 2011

திருக்கயிலாயக் காட்சிகள் - 2007 -9


இத்துடன் ஆண்டின் திருக்கயிலாய யாத்திரை இத்துடன் முடிவடைகின்றது. மேலும் அதிக விவரங்களுடன் மீண்டும் சந்திப்போம்.
நன்றி திரு தேஷ்பாண்டே அவர்களுக்கும் மற்றும் இது வரை வந்து தரிசித்தவர்களுக்கும். 
With thanks to Shri Deshpandey, this series of 2007 Kailash Manasarovar yatra ends here. Again hope to meet you with next year's photos if He wills so.
Thanks  for those who came and have the darshan of the Lord so far.


திரு தேஷ்பாண்டே அவர்கள் 


Jang Chu River
ஜாங் சூ ஆறு


Gauri Kund
கௌரி குளம்



திருக்கயிலாயக் காட்சிகள் - 2007 -8

Crossing the Dolma Pass is the toughest day of the journey . This is the highest point in the whole journey. Dolma pass is also called Devi paravt.
யாத்திரையின் உயரமான இடமும், மிகவும் கடினமான பயணமும் டோல்மா கணவாயைக் கடப்பதுதான்.
டோல்மா நமக்கு பார்வதி தேவி.
ஐயனின் கிழக்கு முகம் டோல்மா கணவாயிலிருந்து
Eastern face of the Lord

Tibetan womwn doing Kora with prostration

அடியளந்து கும்பிடுவது போல் விழுந்து கும்பிட்டு கோரா செய்யும்
திபெத்தியப் பெண்கள்





சிவ ஸ்தலம் கிழக்கு முகத்தின் தொடர்ச்சி
இங்கு அமர்ந்து தான் யமன் டோல்மாவை கடப்பவர்களூக்கு
அருளுவதாக ஐதீகம்

Shiva Sthal on way to Dolma Pass
Eastern extension of Kailash
(It's here that yamadarma sit's and accesses those cross Dolma Pass)

திருக்கயிலாயக் காட்சிகள் - 2007 -7

அதை இந்திர ஜாலம் என்பதா மகேந்திர ஜாலம் என்பதா? முதலில் சூரியனின் காலைக்கதிர்கள் எம்பெருமானின் முடியில் உள்ள நாக படத்தை மட்டும் சிவப்பாக்கினான், பின் நேரம் செல்ல செல்ல அப்படியே அது கீழே நகர்ந்தது, சில நிமிடங்களில் முகம் முழுவதும் சிவப்பு நிறமாகி விட்டது, பின் அப்படியே தங்க வர்ணம், இன்னும் சிறிது நேரத்திற்கு பின் முன் போல து‘ய வெள்ளை நிறமாகி விட்டது. ஸ்ரீ ருத்ரத்திலே வருகின்ற

அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸ”மங்கல: யே சேமாகும் ருத்ரா அபிதோ திக்ஷ” ஸ்ரிதா: ஸஹஸ்ரஸோ -வைஷாகும்-ஹேட ஈம:

( சூரியனைப் போல எம்பெருமான் காலையில் தாமிர சிவப்பு வர்ணத்தில் காட்சி தரும் எம்பிரான் பின் சிறிது நிறம் மாறி சிவப்பு நிறமாகி(அருண) பின் தங்க வர்ணம் ஆகின்றார், அவர் தனது ஆயிரம் கதிர்களால் உலகமெங்கும் பரவி நம்முடைய அறியாமை இருளை நீக்குகின்றார், அவர் மங்கள வடிவினர், இவ்வாறு ஆயிரம் ருத்ரர்களாக விளங்கும் சிவ—ருமானை அடி வீழ்ந்து வணங்குகின்றோம்.) என்ற மந்திரத்திற்கு அருமையான விளக்கத்தை அளித்தார் எம்பெருமான் இந்த வாமதேவ முக வர்ண ஜாலத்தால்.











திருக்கயிலாயத்தில் ஆனந்த பிரதோஷ தாண்டவம்
திருமால் மத்தளம், பிரமன் தாளம், கணேசனும் முருகனும், மயில் மூஷிகம் ஆட ஐயனும் அம்மையும் ஆடும் அழகு











Holy Kailsh like Rising sun between vajrapani and avalokeshwara - உதய சூரியன் போல் திருக்கயிலாயம்








Lord in His usual self - சுவேத வர்ணேஸ்வராக

எம்பெருமான்

Golden yellow Hued Lord Shiva - தங்கமென மின்னும் எம்பெருமான்









வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: ஸ்ரேஷ்டாய நமோ ருத்ராய நம:
காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாய நமோ பலாய நமோ
பலப்ரமதாய நமஸ்-ஸர்வ-பூததமநாய நமோ மநோந் மநாய நம:

Full of red - அருண நிறத்தில் எம்பிரான்



வர்ண ஜாலத்தின் அடுத்த கட்டம்



இந்திர ஜாலத்தின் துவக்கம்
Sequence of sun's rays illumnating the face of the Lord first making it red and then to yellow and then to white. A sight to behold.



This post is republished for the benifit of new comers