ஈசான முகம் : சிறுபிள்ளை முகம் போல் பளிங்கு நிறமாய் ஈசான திசையை பார்த்து மேல் நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை குறிக்கின்றது, ஐந்தொழிலில் அருளல் தொழிலைக் (அனுக்கிரகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் "ய". ஐயன் சதாசிவ வடிவம். அம்மை பராசக்தி வடிவம். சுத்த அன்னம் நைவேத்யம். இம்முகத்தை
ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம்
பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர்
ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸ’வோம்.
என்னும் ஊர்த்வ வக்தர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம். சிவலிங்கம் போல் விளங்கும் கயிலாய மலையின் மேல் நோக்கிய முகம் இதோ கையிலங்கிரியிலே ஈசான முகத்தை நேரடியாக நாம் பார்க்க முடியாது, மலைதொடரிலே கையிலாய சிகரம் மட்டு 2000 அடி உயரம் அதிகம் மேலும் நான்கு புறமும் பர்வதங்களால் சூழப் பெற்றுள்ளதாலும் கைலாயத்தின் சிகரத்தின் அடிவாரத்திலே ஆழமான பனியாறுகள் இருப்பதாலும் யாரும் கையிலங்கிரியை நெருங்குவதே கடினம் எனவே ஈசான முக தரிசனம் இந்த படத்தின் மூலமாகவே கிட்டும்.


No comments:
Post a Comment