மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Wednesday, July 20, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 12

கௌரி குளம்








ஜூன் மாதத்தில் கௌரி குளம்




இக்குளத்தில் அன்னை பார்வதி தன் சேடிகளுடன் குளிப்பதாக ஐதீகம். இதன் தீர்த்தம் புற்று நோயைக் தீர்க்கும் வல்லமையுடையது.





கௌரி குளத்தின் பல்வேறு காட்சிகள்



மலையரசன் பொற்பாவை மரகதவல்லி உமையம்மையின் திருமேனி பட்டதால் மரகதமாய் மின்னும் கௌரி குளம்



திருக்கயிலாய் கிரிவலப்பாதையின் உயரமான இடமான பார்வதி தேவியின் வாசஸ்தலமான டோல்மா கணவாயில் அமைந்துள்ளது இந்த கௌரி குளம்.

Saturday, July 16, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 11



டோல்மா கணவாய்

பனிக் காலத்தில் டோல்மா கணவாய்






டோல்மா கணவாய் இந்த யாத்திரையின் உயரமான இடம். கடல் மட்டத்திலிருந்து 5500 மீட்டர் உயரம் (18600 அடி), வடக்கு முகத்திலிருந்து டோல்மா கணவாய் வரை, மலை, சிவலிங்கத்தின் தாரா போல ஒரே மலையாக நீண்டுள்ளது. இந்த இடம் சிவ சக்தி ஸ்தலம் என்றும் அறியப்படுகின்றது. இங்கிருந்து தான் எம்பெருமான் மோக மாயையை விடுத்து யோகிஸ்வரராக யோகத்தில் அமர கயிலை சென்றார் என்பது ஐதீகம்



















சிவசக்தி ஸ்தலமான டோல்மா கணவாய்




பார்வதி தேவி






திருக்கயிலாய தரிசனம் 2005- 10




ஈசான முகம் : சிறுபிள்ளை முகம் போல் பளிங்கு நிறமாய் ஈசான திசையை பார்த்து மேல் நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை குறிக்கின்றது, ஐந்தொழிலில் அருளல் தொழிலைக் (அனுக்கிரகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் "ய". ஐயன் சதாசிவ வடிவம். அம்மை பராசக்தி வடிவம். சுத்த அன்னம் நைவேத்யம். இம்முகத்தை




ஈஸான: சர்வ வித்யானாம் ஈஸ்வர: சர்வ பூதானாம்
பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர்
ப்ரஹ்மா சிவோ மே அஸ்து சதாஸ’வோம்.




என்னும் ஊர்த்வ வக்தர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம். சிவலிங்கம் போல் விளங்கும் கயிலாய மலையின் மேல் நோக்கிய முகம் இதோ கையிலங்கிரியிலே ஈசான முகத்தை நேரடியாக நாம் பார்க்க முடியாது, மலைதொடரிலே கையிலாய சிகரம் மட்டு 2000 அடி உயரம் அதிகம் மேலும் நான்கு புறமும் பர்வதங்களால் சூழப் பெற்றுள்ளதாலும் கைலாயத்தின் சிகரத்தின் அடிவாரத்திலே ஆழமான பனியாறுகள் இருப்பதாலும் யாரும் கையிலங்கிரியை நெருங்குவதே கடினம் எனவே ஈசான முக தரிசனம் இந்த படத்தின் மூலமாகவே கிட்டும்.





See how the HOLY Kailash resemblesa Shiv Lingam with the extension on the east side.








திருக்கயிலாய தரிசனம் 2005- 9







சத்யோஜாதம்: அரசம் பூ போல் வெண்மை நிறமாய் பிடரியில் மேற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்கின்றது , ஐந்தொழிலில் படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது (பிரம்ம ஸ்ருஷ்டி காரண முகம்). ஐந்தெழுத்தில் 'ந'.



முதல் நாள் கிரி வலம் செய்யும் போது இம்முக தரிசனம் நன்றாக கிடைக்கின்றது. மற்ற முகங்கள் குவிந்து உள்ளன ஆனால் இம்முகம் மட்டும் குழியாக உள் வாங்கி இருக்கின்றது. இம்முகத்தை திருமயிலையிலே கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.





ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோஜாதாய வை நமோ நம:

பவேபவே நாதிபவே பவஸ்வ மாம் பவோத் பவாய நம:

என்னும் பஸ்சிம வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்கின்றோம்.










திருக்கயிலாய தரிசனம் 2005- 8










தத்புருஷம் : யௌவன பருவமுடையதாய் கோகம்பூ நிறமாய் கிழக்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் வாயுவை குறிக்கின்றது, ஐந்தொழிலில் காத்தல் தொழிலை (தத்புருஷ கவச திரோபவ காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'வ", ஐயன் மகேஸ்வர வடிவம். அம்மை ஞான சக்தி வடிவம்.









இம்முகத்தை



ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹ’ தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் என்னும் ப்ராக் வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதிக்கின்றோம்.























திருக்கயிலாய தரிசனம் 2005- 7




தெற்கு முக தரிசனத்திற்குப் பிறகு நாளை கிழக்கு முக தரிசனத்திற்கு செல்வோம்.






புராணங்களின் படி இம்முகம் தொங்கிய தாடி உடையதாய் வெளிப்பட்ட பற்களுடையதாகி, கண்டோர்க்கு அச்சமாய் கரிய நிறமாகி வயதான முகம் போல் வலத்தோளில் தெற்கு நோக்கி இருக்கும் முகம். பஞ்ச பூதங்களில் இம்முகம் அக்னியை குறிக்கின்றது. ஐந்தொழிலிலே அழித்தல் தொழிலை (சம்ஹார காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'சி'. ஐயன் அகோர ருத்ர ரூபம். அம்மை இச்சா சக்தி.









அகோரேப்யோத கோரேப்யோ கோரகோர தரேப்ய: ஸர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ர ரூபேப்ய என்னும் தக்ஷ’ண வக்த்ர ப்ரதி பாதக மந்திரத்தால் துதி செய்தோம்.























யம பயம் போக்கும் யம துவாரம்


மற்றும் திருக்கயிலாயம்















































இது வரை அலி ரோட்டிலிருந்து கண்ட தரிசனம் இனி வருவது யமதுவாரத்திலிருந்து கண்ட தரிசனம்









žரிய சிம்மாதனத்தில் அமர்ந்து உலகை இரக்ஷ’க்கும்



ஜகன் நாயகி நாயகனின் தரிசனம் நந்தியுடன்



நந்தி தேவர் தரிசனம்










எங்கள் குழு தக்லகோட்டில் தங்கியிருந்த போது நாங்கள் சந்தித்த ஒரு மும்பை புகைப்படக்காரர் 18 முறை கைலாய தரிசனம் செய்தவர், ஆலோசனை கூறியபடி டார்ச்சென் முகாமிலிருந்து 18 கி. மீ பயணம் செய்து திருக்கயிலாய தரிசனம் செய்தோம். இது வரை நாம் செய்த தரிசனம் முக மண்டலம் மட்டும் தான் இப்போது நாம் செய்யும் தரிசனம் அடியிலிருந்து முடி வரை. நந்தி மற்றும் கணேசருடன்

திருக்கயிலாய தரிசனம் 2005- 6







இன்று எம்பெருமானை அருகிலிருந்து தரிசனம் செய்தோம் நாளை தூரத்திலிருந்து முழுமையாக தரிசனம் செய்யலாம்.













எம்பெருமானுக்கு எதிரே மலை வடிவில் நந்தி








வலப் பக்கம் முழு முதற் கடவுள் கணேசர்










தெற்கு முகம் - அகோர முகம் : தக்ஷ’ணாமூர்த்தி ரூபம். இந்தியாவை நோக்கியுள்ள முகம். யாத்திரை செல்லும் போது முதலில் தரிசனம் தரும் முகம். திருமுக வதனம், முக்கண்கள், ஜடா முடி முதலியன தரிசனம் தரும் முகம். வலப்பக்கத்திலே கணேசரையும் எதிரே நந்தியெம்பெருமானையும் தரிசனம் தரும் முகம். யம துவாரத்திலிருந்தும் தரிசனம் செய்யும் முகம். மூன்று நாட்கள் தரிசனம் தரும் முகம். மானசரோவர் மற்றும் இராக்ஷஸ் தால் தடாககங்களிடமிருந்தும் தரிசனம் செய்யும் முகம்.

Monday, July 11, 2011

திருக்கயிலாய தரிசனம் 2005- 5

அடுத்து இனி தெற்கு முக தரிசனம்.




வடக்கு மற்றும் கிழக்கு ( ஒரு பகுதி) முக தரிசனம்.



மேற்கு முக மற்றும் வடக்கு முக தரிசனம்







டோல்மா கணவாய் செல்லு வழியில் கைலாய தரிசனம். சிவலிங்கத்தின் தாரா போல விளங்கும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியை தெளிவாக காணலாம். சூரிய ஒளியில் மின்னும் அழகு.


முதன் முதலில் ஞானப்பழம் பெற வினாயகர் அம்மையப்பரை கிரிவலம் வந்ததைப் போல நாமும் கிரி வலம் வரும் போது கிடைக்கும் காட்சிகளில் சில இன்று.