மலை வளம் மற்றும் நீர் வளம் கண்டோம் இனி மலர் வளம் காண்போம்.
தாருசூலாவை நெருங்கும் போது பயணம் செய்யும் பேருந்தை நணைக்கும் நீர் வீழ்ச்சிகள் அடுத்த நாள், நம்மையும் நனைக்கின்றன. களைத்து வரும் தன் அன்பர்களை அந்த ஆண்டவன் தனது அமுத தாரைகளால் ஆசிர்வாதம் செய்வது போல் உள்ளது.

தாருசூலாவில் காளி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நட்புப்பாலம், இந்தியாவையும் நேபாளத்தையும் இனைக்கின்றது.
மற்றொரு சங்கமம்
வழியிலேதான் எத்தனை விதமான நீர் வீழ்ச்சிகள், வெள்ளிக் கம்பி போல் மெல்லியதாக், அகண்டதாய், பல்வேறு பிரிவுகளாய், வர்ணிக்கவார்த்தைகளே இல்லை, சிலவற்றை கண்டு களியுங்கள்.

காளி மற்றும் டிங்கர் நதிகளின் சங்கமம்
நடைப்பயணம் இந்திய நேபாள இயற்கை எல்லையான காளி நதியின் கரையோரமாக. காளி நதி சிறு ஊற்றாக முக்கூடலாம் நபிதாங்கில் உற்பத்தியாகி, காளி குளத்திலிருந்து தண்ணீரைப் பெற்று வழியெங்கும் பல் வேறு சிற்றாறுகள் சங்கமம் ஆகி ஆக்ரோஷத்துடன் பாயும் அழகையும், காளி நதியில் இனையுன் பல்வேறு நீர் வீழ்ச்சிகளையும் கண்டு களியுங்கள்.













Thank you Arul
ReplyDelete