
இந்த மஞ்சள் நிறம் தாய் பார்வதியின் முகத்தைக் குறிக்கின்றது.




மலர்களிலே பல நிறம் கண்டேன் சிவபெருமானின் வடிவம் அதில் கண்டேன் என்றபடி வழியெங்கும் பல வண்ண மலர்கள் குறிப்பாக சியாலேவில் மலர் சமவெளியில் அவ்ற்றுள் சில.

இந்த மஞ்சள் நிறம் தாய் பார்வதியின் முகத்தைக் குறிக்கின்றது.




மலர்களிலே பல நிறம் கண்டேன் சிவபெருமானின் வடிவம் அதில் கண்டேன் என்றபடி வழியெங்கும் பல வண்ண மலர்கள் குறிப்பாக சியாலேவில் மலர் சமவெளியில் அவ்ற்றுள் சில.

வழியிலேதான் எத்தனை விதமான நீர் வீழ்ச்சிகள், வெள்ளிக் கம்பி போல் மெல்லியதாக், அகண்டதாய், பல்வேறு பிரிவுகளாய், வர்ணிக்கவார்த்தைகளே இல்லை, சிலவற்றை கண்டு களியுங்கள்.

காளி மற்றும் டிங்கர் நதிகளின் சங்கமம்
நடைப்பயணம் இந்திய நேபாள இயற்கை எல்லையான காளி நதியின் கரையோரமாக. காளி நதி சிறு ஊற்றாக முக்கூடலாம் நபிதாங்கில் உற்பத்தியாகி, காளி குளத்திலிருந்து தண்ணீரைப் பெற்று வழியெங்கும் பல் வேறு சிற்றாறுகள் சங்கமம் ஆகி ஆக்ரோஷத்துடன் பாயும் அழகையும், காளி நதியில் இனையுன் பல்வேறு நீர் வீழ்ச்சிகளையும் கண்டு களியுங்கள்.
புதி மலைகள் மலர் சமவெளியின் நுழைவாயில்


இந்திய சீன எல்லையை நெருங்கும் போது.
காலாபானி அருகில்
பித்தோர்கர் செல்லும் வழியில் மலை வளம்.

கைஞ்சி கிராமத்தின் வைஷ்ணவ தேவி கோவில் இமய மலையின் மடியில்.
கெஸ்கு கிராமத்தில் நிலச்சரிவின் காரணமாக எதிர்பாராதவிதமாக இரவை கழித்த பின் காலையில் கண்ட நேபாள மலைக் காட்சி.

பித்தோர்கர் நகரிலிருந்து இமய மலையின் காட்சி.
சிகரங்களை கண்டு களித்த நாம் இப்போது மலைகளை கண்டு களிப்போம்.


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள நீலகண்ட சிகரம்


படம் எடுத்திருக்கும் நாகம் போன்று தோன்றும் நாக பர்வதம், அருகில் உள்ள சிறிய சிகரம் நாகினி சிகரம்

மனித உடலின் நாபியை போன்று அமைந்துள்ள நாபி பர்வதம்.
திரிசூல பர்வதம், ஓம் பர்வதம், மற்றும் நாபி பர்வதம் ஆகிய மூன்றும் இந்திய,நேபாள, சீன எல்லையில் அமைந்துள்ள முக்கூடல்.

இயற்கையின் ஒரு அதிசயம் -ஓம் பர்வதம் -நாபிதாங்
திரிசூல பர்வதம்- சிவன், பார்வதி, கணேசரை குறிப்பதாக ஐதீகம் - நாபிதாங்

இராமரின் பாட்டனாரான குர்லா மாந்தாத்தா தவம் செய்த குர்லா சிகரம். சைனாவில் அமைந்துள்ளது.
பூ சமவெளியின் நுழைவாயிலான சியாலே மலைச்சிகரம்
லிபுக்கணவாயிலிருந்து இந்திய மலைப்பகுதி


நேபாளப்பகுதியில் அமைந்துள்ள அன்னபூரணி சிகரம்.

ஆதி கைலாயம் -சிறிய கைலாயம்.
இந்திய பகுதியில் அமைந்துள்ள சிகரம் திருக்கயிலாயம் போன்றே தோன்றுவதால் இந்தப் பெயர்.
இன்றைய பதிவில் திருக்கயிலாயத்திற்கு நடந்து செல்லும் வழியில் உள்ள சில பனி மூடிய சிகரங்களை கண்டு களியுங்கள்.






அசுரன் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த போது உருவாக்கிய ஏரி இந்த இராக்ஷஸ் தால் ஏரி. எனவே இதன் தண்ணீரை நாம் பயன்படுத்துவது இல்லை. ஆயினும் யாத்திரையின் போது நமக்கு கயிலங்கிரியின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது.