மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை மலை மானசரோவர் யாத்திரை பற்றிய பல்வேறு தகவல்களை தாங்கள் இந்த இணைய தளத்தில் காணலாம்

Monday, January 2, 2012

கண்டேன் அவர் திருப்பாதம் -2

HOLY KAILASH & MANASAROVAR

Aerial view of Kailash - வானத்திலிருந்து கையிலங்கிரி காட்சி( ஈசான முகம்)


யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதியான ஸ்ரீ ருத்ரத்திலே சிவபெருமான் கைலாய வாசன் என்பதை கிரிஸந்தா, கிரித்ரா, கிரிஸாச்சா, நமோ கிரிஸாய ச என்ற தொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகின்றன. இம்மலையின் பெருமையைப் பற்றி காளிதாசர் தமது குமாரசம்பவத்திலே இவ்வாறு பாடுகின்றார். "வடக்கிலே அமைந்துள்ளது ஒரு பெரிய மலை, எப்போதும் பனியினால் போர்த்தப்பட்ட மலை, தெய்வீகம் பொருந்திய மலை, கிழக்கு கடலிலிருந்து மேற்கு கடல் வரையில் விரிந்து பரந்துள்ள விசாலமான மலை" இம்மலையின் புனிதத்தன்மையை பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், சிவ புராணம், இராமாயணம், உபநிடதங்கள் முதலியவற்றில் உள்ளன. இம்மலை "பூலோக மேருவாக" கருதப்படுகின்றது.


சிவ பெருமானும் பார்வதி தேவியும் நித்திய வாசம் செய்யும் தலம் இது. இராமாயணத்தில் இமய மலைக்கு இனையான மற்றொரு மலை இல்லை ஏனென்றால் அதன் உச்சியிலே அது பரம பவித்ரமான கைலாயத்தையும், மானசரோவரையும் கொண்டுள்ளது, கைலாய பர்வதத்தை தரிசனம் செய்தவுடனே ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு சமயம் தத்தாத்ரேயர் கயிலங்கிரி யாத்திரை மேற்கொண்டார், அவர் புண்ணிய மானசரோவரில் நீராடி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் தரிசனம் செய்த பின், சிவபெருமானிடம் வினவினார் " பிரபோ, இப்பூவுலகில் பவித்ரமான சேத்திரம் எது? " என்று அதற்கு கருணைக்கடலான எம்பெருமான் பதில் கூறினார், "கயிலாயம் மானசரோவர் தான் இப்புவுலகில் பரம பவித்ரமான தலம். அதை தரிசனம் செய்ய வேண்டியது கூட இல்லை அதை பற்றி நினைப்பவர்களின் பாவம் அனைத்தும் அதே நொடியில் விலகி விடுகின்றது" என்று இத்தலத்தின் சிறப்பை தமது திருவாயினாலே கூறி அருளினார். எனவே தீர்த்த யாத்திரைகளின் சிகரமாக இந்த கைலாஷ்-மானசரோவர் யாத்திரை கருதப்படுகின்றது. 


சொர்க்க லோகத்திலிருந்து பூமியில் இறங்கிய புனித கங்கையை சிவபெருமான் தமது ஜடாமுடியில் தாங்கி இறக்கியது இம்மலையில் தான். இன்றும் கைலாயத்தின் žதள நீரினால் உருவாகும் சந்தோத் என்னும் தடாகத்தில் இருந்து உருவாகும் யமனின் சகோதரியான அலக்நந்தா என்ற ஆறு பத்ரிநாத் அருகில் ஓடி பின்னர் பகீரதியுடன் கலக்கின்றது பின் கங்கையுடன் கலக்கின்றது என்பது ஐதீகம்



South face of Holy Kailash - தக்ஷ’ணாமூர்த்தி தரிசனம்- கயிலாய தெற்கு முகம் (அகோர முகம்) கணேசருடன்



இவ்வாறு இந்தியாவிற்கு சிகரமாயுள்ள இமய மலையின் கொடுமுடியாய் திகழ்வது கயிலயங்கிரி. அதற்கு அருகில் அமைந்துள்ளது மானசரோவரம் எனப்படும் தடாகம். இரண்டும் சேர்ந்து "கௌரி சங்கர்" என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டையும் தரிசனம் செய்தவர்களுக்கு மறு பிறவி என்பது கிடையாது என்பது ஐதீகம். 

மேலும் அந்த பெருமான் அழைத்தால் மட்டுமே அந்த தேவ பூமிக்கு நாம் செல்ல முடியும். அடியேன் பல் வேறு கட்டுரைகளில் கையிலாயம் சென்றும் கூட பெருமானை மேக மூட்டத்தால் தரிக்காமல் திரும்பி வந்தவர்களை பற்றி படித்துள்ளேன். எல்லாம் அவன் செயல். நாம் இந்த பூத உடலுடன் திருக்கயிலாயம் மட்டுமே செல்ல முடியும், சத்ய லோகமோ, வைகுண்டமோ, ஸ்ரீ புரமோ, நாம் உடலுடன் செல்ல முடியாது. அதுவும் நம்முடைய பல ஜன்மங்களின் புண்ணியங்களின் பலனாகவும், நமது பித்ருக்கள் மகிழ்ந்து செய்யும் ஆசியினாலுமே, கடைசி ஜன்மத்தில் மட்டுமே கைலாய தரிசன பிராப்தி கிடைக்கின்றது என்பது ஐதீகம். சூரியனைக் கண்டதும் பனி விலகுவது போல கயிலையை தரிசித்தவுடன் ஒருவருடைய பாவங்கள் எல்லாம் விலகுகின்றன. எவன் ஒருவன் கைலாயத்தை கண்டு தரிசனம் செய்கின்றானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன. முன்னோர்கள் (பித்ருக்கள்) பலர் செய்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவருக்கு இந்த ஜன்மத்தில் கைலாய மானசரோவர் தரிசனம் கிட்டும்.

Waves sparkling like diamond during noon
மதிய சூரிய ஒளியில் வைரமென மின்னும் மானசரோவரின் அழகு.






மானசரோவரில் நீராடுவதைப் பற்றி இராமாயணத்திலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது "மானசரோவரின் மண்ணானது எவருடைய உடலில் படுகின்றதோ அல்லது யார் மானசரோவரில் நீராடுகிறார்களோ அவர்கள் பிரம்ம லோகத்தை அடைகின்றார். யார் மானசரோவரின் தீர்த்தத்தை பருகுகின்றனரோ அவர்கள் சிவசாயுஜ்யத்தை அடைவதுடன் நு‘று ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர் . அதன் நீர்த்துளிகள் முத்து போன்றவை." இவ்வளவு சிறப்பு வாய்ந்த, இத்தகைய புனிதங்களுடைய யாத்திரையை யாத்திரைகளுக்குள் எல்லாம் தலை சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.


மத்திய அரசு நடத்தும் யாத்திரையில் ஒரு வருடத்திற்கு சுமார் 300-400 பேருக்கு மட்டுமே யாத்திரைக்கு வாய்ப்பு கிடைக்கின்றது எனவே இந்த யாத்திரைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அந்த பெருமானாலேயா தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது உண்மையே. நாமே சங்கர ஸ்வரூபம் ஆனால் ஒழிய சங்கரரின் தரிசனம் கிடைக்காது எனவே ஒருவர் கைலாய யாத்திரை செய்தால் அது அவரது வாழ்வின் ஒரு மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.



Kailash Sunlit North Face - சூரிய ஒளியில் தங்கமென மின்னும் வடக்கு முகம் (வாம தேவ முகம்)


மானசரோவர் தடாகம் நான்முக பிரம்ம தேவர் தமது மனத்திலிருந்து உருவாக்கியது தான் மனசரோவர். மனஸ் - என்றால் மனது, சரோவர் என்றால் குளம், எனவே தான் இது ஆதி காலத்தில் பிரம்மாசர் என்றும் அழைக்கப்பட்டது. சமுத்திர மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மனசரோவர் தடாகம் 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. இதன் சுற்றளவு 110 கி, மீ ஆகும். கைலாயத்தின் தெற்கே 30 கி. மீ து‘ரத்தில் அமைந்துள்ளது இத்தடாகம். இதன் தென் புறம் இன்னோரு வெள்ளிப்பனி மலையான குர்லா மந்தாதா மலைத் தொடர்கள் உள்ளன. ம நீல வண்ணத்தில் மின்னும் இத்தடாகம் பல் வேறு உணர்ச்சிகளை காட்டுகின்றது. மிடத்திற்கு மிடம் இதன் வர்ணம் மாறுகின்றது , அந்த அழகை வர்க்க வார்த்தைகளே இல்லை. அதுவும் பௌர்ணமி காலங்களில் கோடிக் கோடி நட்சத்திரங்களை தன் தண்ரில் பிரதிபலிக்கும் அழகே அழகு. காற்று அதிகம் மாசுபடாததாலும், உயரம் அதிகம் என்பதாலும் அதிக நட்சத்திரங்களை இரவில் நாம் இங்கு காணலாம்.

மானசரோவரத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுகின்றனர் பெரியோர். அம்மை இங்கே மானஸாதேவியாக (சிலர் தாக்ஷ‘யி என்பர்) எழுந்தருளி அருள் பாலிப்பதாக ஐதீகம். சதி தேவியின் இடது குதிகால்பாகம் விழுந்த பீடமே மானசரோவர் சக்தி பீடம். ஒரு சிலர் அம்மையின் இடது கை இங்கு விழுந்ததாகவும், அக்கரம் விழுந்த வேகத்தில் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டதாகவும், பின்னர் பிரம்ம தேவர் அந்த பள்ளத்தை மானசரோவர் ஏரி ஆக்கினார் என்றும் நம்புகின்றனர்.

வைணவ சம்பிரதாயத்திலே மானசரோவரம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான திருப்பிரிதி என்னும் திவ்ய தேசம் என்பது ஐதீகம். ஆனால் இப்போது அங்கு அம்மன் கோவிலோ அல்லது பெருமாள் கோவிலோ இல்லை மானžகமாகதான் நாம் அவர்களுக்கு பூஜை செய்ய வேண்டும் žனப்புரட்சியின் போது அவை அழிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே இந்துக்களில் அறு சமயத்தினருக்கும் மானசரோவரம் அனாதி காலம் முதல் பரம புண்ய தலமாக விளங்குகின்றது என்பதில் சிறிதும் ஐயமில்லை.


திபெத்தியர்கள் இத்தடாகத்தை சோ- மஃபம் (Tso-Mapham) அல்லது சோ-மவாங் (Tso-Mavang) அதாவது விலை மதிப்பற்ற ஏரி என்று அழைக்கின்றனர். புத்தரின் தாயான மாயா தேவியை தேவர்கள் இத்தடாகத்தில் நீராட்டி புனிதம் செய்த பின்னரே புத்தர் இவர் வயிற்றில் வெள்ளைக் குதிரையில் வந்து கருக்கொண்டதாக நம்பப்படுகின்றது.

இன்றும் இரவிலே பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள் தேவதைகள் நட்சத்திர ரூபத்தில் இத்தடாகத்திலே நீராடிகைலாச வாசனை, கனக சபேசனை, ஸ்மசான வாசனை, நீல கண்ட மஹாதேவனையும், பூர, மானோன்ம, தயாபரி, அம்பிகையும் வணங்கிச் செல்வதாக நம்பப்படுகின்றது. திருக்கயிலாய யாத்திரை செல்லும் பல் வேறு யாத்ரீகர்கள் இந்த அற்புத அனுபவத்தை நேரில் கண்டுள்ளனர்.

இனி மானசரோவர் எவ்வாறு உருவானது என்பதற்கான புராண கதைகளை பார்ப்போமா? ஒரு சமயம் பிரம்மாவின் புத்திரனான முனிவர் மற்றும் பல முனிவர்கள் இம்மலையில் சிவ பெருமானை குறித்து தவமியற்றினர் 12 வருடங்கள் கழித்து சிவபெருமானும் பார்வதியும் காட்சி கொடுத்தனர். அப்போது அவர்களுக்கு பூஜை செய்ய அந்த மலையில் தண்ர் இல்லாததால் முனிவர்கள் அனைவரும் பிரம்மாவை வேண்ட அவரும் தனது மனதின் சக்தியினால் மானசரோவர் தடாகத்தை ஏற்படுத்தினார் அப்போது அந்த நீரிலிருந்து ஒரு சொர்ண லிங்கம் தோன்றியது என்பது ஒரு ஐதீகம். பின் முனிவர்கள் இந்த சொர்ண லிங்கத்தை வழிபட்டனர் என்பது ஐதீகம்.

இந்த புண்ய பூமியில் ஒரு சமயும் இலங்காதிபதி இராவணனும், வியாச முனிவரின் சிஷ்யர்களும் தவமியற்றிக் கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் இராவணன் உருவாக்கிய ராக்ஷஸ் தால் என்ற தடாகத்தின் தண்ரை உபயோகப் படுத்தக் கூடாது என்று அவன் மறுத்ததால், முனிவர்கள் வேண்ட பிரம்மா இத்தடாகத்தை உருவாக்கினார். அதிலே பிரம்மா ராஜ அன்னப்பறவையாக வலம் வந்தார். இன்றும் மானசரோவரில் ராஜஅன்னப்பறவையை காண்பவர்கள் பிரம்மாவையே இம்மானசரோவரில் பூக்கின்றன. வைணவ மஹா புருஷரான ஸ்ரீமந் கமாந்த தேசிகர் தமது ஸ்ரீஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் "மநீஷாணாம் மானஸ ராஜ ஹம்ஸம்" என்று அருளிச் செய்துள்ளார். அதாவது 'ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே! ராஜ ஹம்ஸம் என்னும் பறவை மானஸம் என்னும் பொய்கையிலே விளங்குவது போல தாங்கள் ஆத்ம ஞானிகள், பெரியோர் களின் உள்ளம் என்னும் தூய்மையான பொய்கையில் நீர் என்று அருள் புரிகின்றீர் என்பது அடியேன் படித்தது.


சுவாமி பிரனாவானந் அவர்கள் "மானசரோவர் மிகவும் புனிதமான தடாகம், மிகவும் பழமையானது, நாகரீகம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தடாகம். வெள்ளியாக மின்னும் இரண்டு பெரிய மலைகளான கைலாயம் மற்றும் குர்லா மந்தாதா மலைகளுக்கு நடுவே அதன் சகோதரியான இராக்ஷ்ஸ் தால் எனப்படும் மற்றொரு தடாகத்துடன் எழிலாக விளங்குகின்றது இந்த புகழ் பெற்ற ஏரி என்கிறார். "

மானசரோவர் தடாகத்தை வலம் வர பேருந்தில் இரண்டு நாட்கள் ஆகின்றன. மானசரோவரை சுற்றி 8 புத்த விகாரங்கள் உள்ளன. வலம் வரும் போது வண்ண வண்ண மணலையும், பலவிதமான கற்களையும் நாம் காணலாம். இக்கரையில் கிடைக்கின்ற கல் ஒவ்வொன்றும் சிவலிங்கம் என்பது ஐதீகம். கணேசர், கைலாயமலை, மானசரோவர், ஓம் பொறித்த கற்கள், சங்கு வடிவம் என்று அவரவர்கள் கர்ம பலனுக்கேற்ப பலவகையில் கற்கள் கிடைக்கின்றன. இயற்கை அளித்த ஒரு அற்புத அன்பளிப்பு இந்த மானசரோவர் தீர்த்தம், இதில் நீராடுவது மிகவும் புண்யமானது. உடலும் மனமும் பவித்ரமடைகின்றது. பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் மானசரோவரில் செய்வது மிகவும் விசேஷமானது. ஹ’ந்துக்கள் வசந்த காலத்தில் மட்டுமே மானசரோவரை கிரி வலம் வருகின்றனர், ஆனால் திபெத்தியர்கள் குளிர் காலத்திலும் தடாகம் உறைந்துள்ள பனியாக இருக்கும் போதும் கிரிவலம் வருகின்றனர். ஆனால் திபெத்தியர்கள் இத்தடாகத்தில் குளிப்பதில்லை, ஏனென்றால் இதன் தண்ர் தேவர்களுக்கு ஏற்பட்டது என்பது இவர்கள் நம்பிக்கை, ஆனால் தண்ரை இவர்கள் அருந்துகின்றனர். திபெத்திய புராணங்களின் படி பூமியாகிய விராட புருஷனின் தொப்புள் கொடி இந்த மானசரோவர் தடாகம். இந்த தாடாகத்திலிருந்து நான்கு திசைகளிலும் நான்கு ஆறுகள் பாய்கின்றன. வடக்கிலிருந்து சிங்க முக நதி. கிழக்கிலிருந்து குதிரை முக நதி, தெற்கிலிருந்து மயில் அலகு நதி, மற்றும் மேற்கிலிருந்து யானை வாய் நதி, நமது விஷ்ணு புராணத்திலும் திருக்கைலாயத்திலிருந்து நான்கு நதிகள் நான்கு திசைகளில் பாய்வதாக கூறியுள்ளதை இதனுடன் ஒப்பிடலாம்.




இராக்ஷஸ் தால்
கனகமா வயிரம் உந்து மாக்கக் கயிலை கண்டும்
உனகனாய் அரக்கன் ஓடி எடுத்ததும் உமையாள் அஞ்ச
அனகமாய் ன்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் - என்ற படி
அசுரனான இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்த போது உருவாக்கியது இராக்ஷஸ் தால் எனப்படும் தடாகம், இதன் நடுவிலே ஒரு தீவு உள்ளது அதிலே அமர்ந்து தான் இராவணன் சிவபெருமானை நோக்கி தவம் செய்ததாக கூறப்படுகின்றது. எனவே இதை இராவண குளம் என்றும் அழைப்பர். குர்லா மாந்தாதா மலைத்தொடர்களுக்கு — தற்கே மானசரோவரின் இந்த இரட்டை ஏரி உள்ளது. இதுவும் மிகவும் விலாசமான ஏரி. இத்தடாகம் 288 சதுர கி மீ பரந்துள்ளது. இதன் சுற்றளவு 122 கி மீ. ஆழம் 300 அடிகள். உயரம் 4515 மீட்டர். இந்த தண்ர் அசுர குணம் கொண்டது என்பதால் இதை நாம் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உபயோகப்படுத்துவதில்லை. ஆதி காலத்தில் இதன் தண்ர் விஷத்தன்மை பொருந்தியதாக இருந்தது. பின்னர் மானசரோவரிலிருந்து வந்த ஒரு சொர்ண மீன் ஒரு பாதையை உருவாக்கி இரண்டு ஏரிகளையும் இணைத்த பின் இதன் தண்ரும் நல்ல நீராக மாறியது. அந்த கால்வாய் கங்கா- சூ என்று அழைக்கப்படுகின்றது.இதன் நீளம் 6 கி மீ . கங்கா- சூ வில் எப்போதும் தண்ர் பாய்வதில்லை. எந்த வருடம் தண்ர் ரம்புகின்றதோ அந்த வருடம் உலக மக்கள் மிகவும் சுபிக்ஷமாக இருப்பார்கள் என்பது ஐதீகம். சட்லஜ் நதி இத்தடாகத்திலிருந்து தான் உற்பத்தியாகின்றது.இந்திய அரசு நடத்தும் யாத்திரையில் செல்லும் போது நமக்கு திருக்கயிலாய மலையின் முதல் தரிசனம் இதன் கரையிலிருந்து தான் கிடைக்கின்றது. மானசரோவர் பகல், சூரியன், வெளிச்சம், ஞானம், நன்மையைக் குறிக்கின்றது என்றால் இராக்ஷஸ் தால் இரவு, சந்திரன், இருள், அஞ்ஞானம், தீமையைக் குறிக்கின்றது. இவ்வாறு தேவ தன்மையும் அசுர தன்மையும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது நமது வாழ்க்கை நன்மையும் தீமையும் சேர்ந்ததே, ஆனால் நாம் நன்மையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை விளக்கும் முகமாக உள்ளது.



No comments:

Post a Comment