உ
ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம்
AAERIAL VIEW OF HOLY KAILASH
காணப் பிறவிகள் ஆயிரம் தவம் செய்தல் வேண்டும், கண்ட பின் உண்டோ பிறவியும் என்று ஞானிகள் அருளியபடி திருக்கயிலாய தரிசனமும், மானசரோவர் ஸ்நானமும் தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய பேராகும். அந்த தரிசனத்தின் திருக்காட்சிகளை இது வரை கண்டு களித்தீர்கள் இனி யாத்திரையை பற்றி முழுமையாக படித்து மகிழுங்கள்.
பார்வதியின் தாய் வீடு இமயமலை
இப்பதிவில் திருக்கயிலாயமும் மானசரோவரும் அமைந்துள்ள பார்வதி அம்மையின் பிறந்த வீடான இமய மலையின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

சிற்றம்பலம் என்பது ஒரு பரமார்த்திக நிலை. இப் பெயர் கொண்ட தலம் சிதம்பரத்தில் உள்ளது. ஆனால் திருக்கயிலாயமோ இயற்கையாகவே லிங்கமாக, உள்ளது. எனவே இமய மலையிலே வருடம் முழுவதும் பனி நிறைந்துள்ள சிகரமான கைலாயத்தை நாம் சிவபெருமானாகவே வழிபடுகின்றோம்.
" யோ ருத்ரோ அக்நௌ யோ அப்ஸ”யேஓஷதீஷ• யோ ருத்ரோவிஸ்வா புவநா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து "
எந்த ருத்ரன் அக்னி, நீர், செடி, கொடி(மூலிகைகள்), மரம், மற்றும் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி நிலைத்திருக்கின்றாரோ அந்த ருத்ர பகவானை வணங்குகிறோம் என்று ஸ்ரீருத்ரத்திலே சிவபெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. அவர் பார்வதியம்மையுடன் நித்ய வாசம் செய்யும் தலம் தான் தான் திருக்கயிலாயம்.

நமது நாட்டின் வடக்கு எல்லையும் அரணுமான இமயமலையே புராணங்களின் படி பார்வதியின் தாய் வீடு. ஸ்ரீ லலிதா அஷ்டோத்தரத்தில் ஒரு நாமாவளி “ஹ’மாசல மஹா வம்ச பாவனாயை நமோ நம:, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் உமா சைலேந்த்ர தனயா. உமையம்மை மலைகளுக்கெல்லம் அரசனான இமய மலையின் அரசன் இமவான் மகளாக பிறந்து, வளர்ந்து விளையாடி தவமிருந்து சர்வேச்வரனை கை பிடித்த இடம். எனவே அம்பிகைப்பற்றி பாடும் போது ஆதி சங்கர பகவத் பாதாள் இமஹ’ரி சுதே, என்றும் கிரி கன்யே என்றும், சைல சுதே என்றும் அன்பொழுகப் பாடுகின்றார். அபிராமி பட்டரும் அபிராமி அம்பிகையை சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை, என்று பாடுகின்றார். பர்வதங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இமய பர்வதத்தின் இராஜனுக்கு மகளானதால் அம்மை பார்வதி என்றும் அழைக்கப்படுகின்றாள். எம்பெருமானை மாணிக்க வாசகரும் தமது திருவாசகத்திலே மலைக்கு மருகனைப்பாடி நாம் தேள்ளேணம் கொட்டோமோ என்று பாடுகின்றார்.
இனி புவியியலின் படி , உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் இளைய மலை இமய மலை தான். இம்மலை சுமார் 30 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது. ஹ’ம் என்றால் பனி என்று அர்த்தம் எனவே எப்போதும் அந்த பனி நிறைந்த மலைக்கு ஹ’ம் + ஆலயம் , இமாலயம் என்று பெயர் ஏற்பட்டது. எப்போதும் பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர் அதிகமாக சிதைவு அடையவில்லை. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் து‘ரம் விரிந்து பரந்துள்ளது. இந்த மலைத்தொடர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும். இந்து மஹா சமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாக மாற்றியுள்ளது இம்மலைகள். அகழ்வாராச்சியின் மூலமாக முதன் முதலில் நாகரீகம் இந்த இமய மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆற்றின் கரையோரங்களில் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமயமலைதான். இம்மலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன சிறிய இமயம், பெரிய இமயம், எல்லை கடந்த இமயம். இவற்றில் கைலாயம் எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளது. பெரிய இமயத்தின் தென் பகுதில் மற்ற இமய மலையின் புண்ணிணிய தலங்களான ரிஷ’கேசம், திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம். கங்கோத்ரி, யமுனோத்ரி முதலியவை உள்ளன.
இனி கைலாய மலையின் பெருமைகளைப்பற்றி பார்ப்போம். யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதியான ஸ்ரீ ருத்ரத்திலே சிவபெருமான் கைலாய வாசன் என்பதை கிரிஸந்தா, கிரித்ரா, கிரிஸாச்சா, நமோ கிரிஸாய ச என்ற தொடர்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல உணர்த்துகின்றன. இம்மலையின் பெருமையைப் பற்றி காளிதாசர் தமது குமாரசம்பவத்திலே இவ்வாறு பாடுகின்றார். "வடக்கிலே அமைந்துள்ளது ஒரு பெரிய மலை, எப்போதும் பனியினால் போர்த்தப்பட்ட மலை, தெய்வீகம் பொருந்திய மலை, கிழக்கு கடலிலிருந்து மேற்கு கடல் வரையில் விரிந்து பரந்துள்ள விசாலமான மலை" இம்மலையின் புனிதத்தன்மையை பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், சிவ புராணம், இராமாயணம், உபநிடதங்கள் முதலியவற்றில் உள்ளன. இம்மலை "பூலோக மேருவாக" கருதப்படுகின்றது. சிவ பெருமானும் பார்வதி தேவியும் நித்திய வாசம் செய்யும் தலம் இது. இராமாயணத்தில் இமய மலை€க்கு இனையான மற்றொரு மலை இல்லை ஏனென்றால் அதன் உச்சியிலே அது பரம பவித்ரமான கைலாயத்தையும், மானசரோவரையும் கொண்டுள்ளது, கைலாய பர்வதத்தை தரிசனம் செய்தவுடனே ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment